ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்; மருத்துவமனையில் சிறுவன் அனுமதி

Added : மே 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : கே.ஜி.எப்., படத்தில், நாயகன் ராக்கி பாய் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பால், சிறுவன் ஒருவன் ஒரு பாக்கெட் சிகரெட்டை, ஒரே நேரத்தில் ஊதி தள்ளினான். இதனால், அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான்.சமீபத்தில் வெளியான, கே.ஜி.எப்., - 2 படத்தின் நாயகன் யஷ், ராக்கிபாய் பாத்திரத்தில், ஸ்டைலாக புகைத்தபடியே நடித்து ள்ளார்.அப்பாத்திரத்தின் மீதான ஈர்ப்பால்,
ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்;  மருத்துவமனையில் சிறுவன் அனுமதி


சென்னை : கே.ஜி.எப்., படத்தில், நாயகன் ராக்கி பாய் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பால், சிறுவன் ஒருவன் ஒரு பாக்கெட் சிகரெட்டை, ஒரே நேரத்தில் ஊதி தள்ளினான். இதனால், அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான்.சமீபத்தில் வெளியான, கே.ஜி.எப்., - 2 படத்தின் நாயகன் யஷ், ராக்கிபாய் பாத்திரத்தில், ஸ்டைலாக புகைத்தபடியே நடித்து ள்ளார்.

அப்பாத்திரத்தின் மீதான ஈர்ப்பால், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்த 15 வயது சிறுவன், ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை, ஒரே நேரத்தில் ஊதித் தள்ளிஉள்ளான். மூச்சுத் திணறலால் மயங்கி கிடந்த சிறுவனை, பெற்றோர், செஞ்சுரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்த்து உள்ளனர். முதல்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில், சிறுவனிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, சிறுவன்புகை பிடித்ததை கூறியுள்ளான்.

தற்போது, சிறுவன் தொடர் சிகிச்சையில் உள்ளான்.இன்றைய இளம் தலைமுறையினர், சினிமாவில் வரும் காட்சிகளை கற்பனை என எண்ணாமல், நிஜமென நம்பி, அதைப் போலவே தாங்களும் மாற நினைக்கின்றனர்.பெரும்பாலும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளாமல்,தீய விஷயங்களை மட்டுமே உள்வாங்குகின்றனர்.

இதனால், இவ்விஷயத்தில் நடிகர், நடிகையர் சமூக பொறுப்போடு நடிக்க வேண்டியது அவசியம். படத்தின் இறுதி காட்சியில், 'இது வெறும் நடிப்பு மட்டுமே; யாரும் முயற்சிக்க வேண்டாம்' என்பது உள்ளிட்ட விழிப்புணர்வை, ரசிகர்களுக்கு தர வேண்டியதும் அவசியமாகி உள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
02-ஜூன்-202220:37:28 IST Report Abuse
Kalaiselvan Periasamy நிஜத்திற்கும் சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாத இந்திய இளம் வயதினரை பார்க்கும் போது , இந்தியாவை விட்டு இன்னமும் அறியாமை விலக வில்லை என்றே என்ன தோன்றுகிறது . இதற்க்கு காரணம் கல்வியின் தர்மா அல்லது பெற்றோரின் அலட்சியமா ?
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
29-மே-202217:41:55 IST Report Abuse
A P இப்போதைய சினிமாவே ஒழிக்கப்பட வேண்டியதுதான். இப்போது சமுதாயத்துக்கு நல்லதை போதிக்கும் படங்கள் எங்கே வருகின்றன. இந்தமாதிரி இக்கால சமுதாயம், படத்தைப் பார்த்து தீய பழக்கத்தை பின்பற்றுகிறது என்று உறுதியானால், அந்தப் படத்தை தடை செய்து, பாதிக்கப் பட்டவர்களுக்கு அவர்களை நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லவேண்டும். ஆமாம், இந்த சென்சார் போர்ட் இப்போது உள்ளதா இல்லையா அல்லது காசு வாங்கிக்கொண்டு இத்தைகைய காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கிறார்களா தெரியவில்லை.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-மே-202214:14:34 IST Report Abuse
raja டாஸ்மாக் சரக்கு, புகை கஞ்சா போதை பொருள்கள் கடத்தலில் தமிழகத்துக்கு வந்த விடியல் சூப்பர்ன்னு தமிழக மக்கள் பெருமையா பேசுகிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X