முதியவர் நிலத்தை ஆக்கிரமித்து 'சர்ச்'; 4 வாரங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை : சென்னையில், 87 வயது முதியவருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, கட்டப்பட்ட 'சர்ச்' உள்ளிட்ட கட்டுமானத்தை அகற்றும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த, 87 வயதான ஈஸ்வரா என்பவர் தாக்கல் செய்த மனு:பாலவாக்கத்தில் 3,800 சதுர மீட்டர் இடத்தை, 1960ல் என் சகோதரர் வாங்கினார்; அவர் இறந்து விட்டார். அவரது சட்டப்பூர்வ


சென்னை : சென்னையில், 87 வயது முதியவருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, கட்டப்பட்ட 'சர்ச்' உள்ளிட்ட கட்டுமானத்தை அகற்றும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil newsசென்னையைச் சேர்ந்த, 87 வயதான ஈஸ்வரா என்பவர் தாக்கல் செய்த மனு:பாலவாக்கத்தில் 3,800 சதுர மீட்டர் இடத்தை, 1960ல் என் சகோதரர் வாங்கினார்; அவர் இறந்து விட்டார். அவரது சட்டப்பூர்வ வாரிசு நான்; அதற்கான
சான்றிதழையும் பெற்றுள்ளேன்.ஆவணங்களில் திருத்தம்
நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், என் சகோதரரின் 1 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்த மனுவை, உயர் நீதிமன்றம் விசாரித்தது. நிலம் கையகப்படுத்தலை ரத்து செய்து, வருவாய் ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டது.இதற்கிடையில், சட்டவிரோதமாக தனசேகரன் மற்றும் பால் மோசஸ், இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, 'சர்ச்' கட்டினர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதி பெறாமல் மேற்கொண்ட கட்டுமானங்களை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் டி.ராஜா, சவுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news
தகுதி இல்லை
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.மகாராஜா ஆஜராகி, ''இடத்தை காலி செய்து ஒப்படைக்க, லோக் அதாலத் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, பால் மோசஸ் தாக்கல் செய்த வழக்கும் முடிக்கப்பட்டு விட்டது,'' என்றார்.பால் மோசஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கை தொடர, மனுதாரருக்கு தகுதி இல்லை' என்றார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நிலத்தை ஒப்படைக்கக்கோரிய மனுதாரரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. சோழிங்கநல்லுார் தாசில்தார் நேரில் ஆய்வு செய்து, இடத்துக்கான பட்டாவை வழங்கி உள்ளார். எனவே, மனுதாரர் தான் இடத்தின் உரிமையாளர் என்பது தெளிவாகிறது.லோக் அதாலத்தில் சமரசம் ஏற்பட்டு, இடத்தை காலி செய்வதாக தனசேகரன் ஒப்பு கொண்டுள்ளார்.மேலும், தன் ஆட்கள், ஏஜன்ட் யாரும் குறுக்கிட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதனால், வழக்கை நடத்த, பால் மோசஸுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை.
சட்டவிரோதம்


மனுதாரருடன் சமரசம் ஏற்பட்டு, இடத்தை தனசேகரன் ஒப்படைத்த பின், வாடகைதாரராக இருப்பவருக்கு இடத்தின் உரிமை பற்றி கேள்வி கேட்க தகுதி இல்லை. திட்ட அனுமதி இன்றி, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை, நான்கு வாரங்களில் அகற்ற, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
29-மே-202215:28:43 IST Report Abuse
madhavan rajan பாவ மன்னிப்பு கேட்கும் தைரியத்தில் பாவங்களை அதிகமாக செய்கிறார்களா? கர்த்தர் காட்டும் வழி இதுதானா? நானே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்பவரை ஏற்று சத்தியம் என்றால் உண்மை, நேர்மை என்பதை உணர்ந்து அதன்படி நடக்க கிருஸ்துவர்கள் முயற்சிக்கவேண்டும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-மே-202214:13:39 IST Report Abuse
அசோக்ராஜ் //"நான்கு வாரங்களில் அகற்ற, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது"// நடப்பது ஆபிரகாமிய தெலுங்கு அரசு என்பது கனம் எசமான்களுக்குத் தெரியாதா? ஏதாவது கோவிலை இடிக்கச் சொல்லுங்க. பன்னிரண்டு மணி நேரத்தில் முடிப்பார்கள். த்ராவிஷம் வெல்கிறது.
Rate this:
Cancel
gilbert - vienna,ஆஸ்திரியா
29-மே-202214:08:13 IST Report Abuse
gilbert இந்துக் கோயில்ன்னா 24மணி நேரம், அதே ஜட்டிக்குள்ள சிடி வைக்கிறவன்னா நாலு வாரம். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X