'சுருட்டியதில்' பெண் டி.எஸ்.பி.,க்கும் பங்கு; தனிப்படை எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' பின்னணி

Added : மே 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை : மதுரையில், தனிப்படை எஸ்.ஐ., சில நாட்களுக்கு முன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதில், இவர் 'சுருட்டிய' பணத்தில் ஒரு பங்கு, பெண் டி.எஸ்.பி.,க்கு கொடுத்தது உண்மையா என, விசாரணை நடைபெற உள்ளது.மதுரை எஸ்.பி., பாஸ்கரனின் தனிப்படை எஸ்.ஐ., ஆனந்த். இவர், குற்றவாளிகளை கைது செய்தல், நகை, பணத்தை மீட்டல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்வார் என, அதிகாரிகளால் பாராட்டப்பட்ட நிலையில், சில
'சுருட்டியதில்' பெண் டி.எஸ்.பி.,க்கும் பங்கு;  தனிப்படை எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' பின்னணி


மதுரை : மதுரையில், தனிப்படை எஸ்.ஐ., சில நாட்களுக்கு முன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதில், இவர் 'சுருட்டிய' பணத்தில் ஒரு பங்கு, பெண் டி.எஸ்.பி.,க்கு கொடுத்தது உண்மையா என, விசாரணை நடைபெற உள்ளது.

மதுரை எஸ்.பி., பாஸ்கரனின் தனிப்படை எஸ்.ஐ., ஆனந்த். இவர், குற்றவாளிகளை கைது செய்தல், நகை, பணத்தை மீட்டல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்வார் என, அதிகாரிகளால் பாராட்டப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன், டி.ஐ.ஜி., பொன்னி இவரை சஸ்பெண்ட் செய்தார்.கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்தது மற்றும் வழக்கு ஒன்றில் 25 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டதில், 9 லட்சம் ரூபாயை 'சுருட்டியது' ஆகிய காரணங்களுக்காக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கள்ளிக்குடி பகுதியில், 2018ம் ஆண்டு எஸ்.ஐ., ஆனந்த் தலைமையிலான போலீசார் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில், ஒரு பகுதியை தன் வசம் வைத்துக் கொண்டதாக, தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிற்கு புகார் வந்தது.விசாரணையில், உண்மை எனத் தெரிந்தது. மேலும், தஞ்சாவூர் பெண் 25 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்ட வழக்கில், மீட்கப்பட்ட முழுத் தொகையையும் ஒப்படைக்காமல் இருந்ததும் தெரிந்தது.

இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எஸ்.ஐ., ஆனந்த், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்திருக்கிறார். அதில், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை தன்வசம் வைத்துக் கொண்டார்.குற்றவாளிகளையும் மாற்றி உள்ளார்.

இது சட்டப்படி தவறு. தஞ்சாவூர் பெண் வழக்கில் மீட்கப்பட்ட 25 லட்சம் ரூபாயை, முழுமையாக அவரிடம் கொடுக்காமல், 16 லட்சம் ரூபாய் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.அவர், 9 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டவில்லை. துறை ரீதியான விசாரணையில் அந்த தொகையின் ஒரு பங்கு அப்போதைய பெண் டி.எஸ்.பி.,க்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது. உண்மையா என அந்த டி.எஸ்.பி.,யிடம், ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரிக்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.




உளவுத்துறை அலட்சியம்!

போலீசார் தவறு செய்கின்றனரா என கவனிக்க வேண்டிய பொறுப்பு உளவுத்துறைக்கு உண்டு. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்படையில் பணிபுரியும் எஸ்.ஐ., ஆனந்த் மீது, அவ்வப்போது புகார்கள் வந்தது குறித்து, உளவுத்துறை விசாரித்து அதிகாரிகளை 'அலெர்ட்' செய்திருக்க வேண்டும்.அந்த வகையில் உளவுத்துறை அலட்சியமாக செயல்பட்டதாக அதிகாரிகளே ஆதங்கப்படுகின்றனர். தனிப்படைக்கு வந்தபின் எஸ்.ஐ.,யின் தனிப்பட்ட பொருளாதார நிலை எப்படி மாறியது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
04-ஜூன்-202210:22:46 IST Report Abuse
Sampath Kumar வேலி தான் பயிரை மேய்கிறது என்ன செய்ய நாம சிஸ்டம் அப்டி
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
31-மே-202203:20:47 IST Report Abuse
NicoleThomson கொடுமை , இந்த மாதிரி போலீஸ்களை வேலைக்கு எடுத்ததற்க்காக கவலைப்பட தோன்றுகிறது
Rate this:
Balakrishnan - Kanyakumari,இந்தியா
04-ஜூன்-202217:07:04 IST Report Abuse
Balakrishnanஎல்லாமே விடியலின் கைங்கர்யமே SI மைண்ட் வாய்ஸ் "நாங்க என்ன சும்மாவா வேலைக்கு சேர்ந்தோம்"...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-மே-202206:32:18 IST Report Abuse
Natarajan Ramanathan பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக இந்த போலீஸ் வைத்திருந்தது மிகவும் ஆபத்தானது. அது நமது இந்திய பொருளாதாரத்தையே சிதைத்துவிடும். அதற்கான தண்டனையும் மிகவும் கடுமையாக இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X