குழந்தை கடத்தல் முயற்சி; உ.பி., வாலிபருக்கு தர்ம அடி

Added : மே 29, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை :கோவையில், குழந்தையை கடத்த முயற்சித்த உத்தரப்பிரதேச வாலிபருக்கு பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கோவை, சிங்காநல்லுார், எம்.ஜி.ஆர்., காலனியில் இரண்டு நாட்களுக்கு முன், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். அவரை அருகில் நின்று வேடிக்கை பார்த்த 6 வயது சிறுமியை, பஞ்சு மிட்டாய் தருவதாக கூறி, அந்த வாலிபர்
குழந்தை கடத்தல் முயற்சி;  உ.பி., வாலிபருக்கு தர்ம அடி


கோவை :கோவையில், குழந்தையை கடத்த முயற்சித்த உத்தரப்பிரதேச வாலிபருக்கு பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை, சிங்காநல்லுார், எம்.ஜி.ஆர்., காலனியில் இரண்டு நாட்களுக்கு முன், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். அவரை அருகில் நின்று வேடிக்கை பார்த்த 6 வயது சிறுமியை, பஞ்சு மிட்டாய் தருவதாக கூறி, அந்த வாலிபர் அழைத்துள்ளார்.வர மறுத்த சிறுமியை இழுத்துச் சென்றுள்ளார்.

அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரித்த போது, சிறுமியை அவர் கடத்திச் செல்ல முயற்சித்தது உறுதி செய்யப்பட்டது.வாலிபர், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் என, தெரியவந்தது. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.அதே வாலிபர், நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். முதல் நாள் அவரை சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்த இருவர், அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்தனர்.'குழந்தை கடத்தல் ஆசாமி' என, கூறியதும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், மீண்டும் தர்ம அடி கொடுத்தனர். அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.பொதுமக்கள் ஒப்படைத்த நபரை, சிங்காநல்லுார் போலீசார் எப்படி விடுவித்தனர் என, விசாரணை நடக்கிறது.Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Sukumar - Nagpur,இந்தியா
29-மே-202208:52:26 IST Report Abuse
K Sukumar He may be paid bribe to police and station in-charge.
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
29-மே-202207:15:11 IST Report Abuse
Sampath Sunganallur police got their 200, 300, 400, 500, no no 1500 from the person concerned
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-மே-202206:27:17 IST Report Abuse
Natarajan Ramanathan இதேபோல் தமிழக இளைஞர்கள் வட மாநிலங்களில் தர்ம அடி வாங்குவது இந்தி நாளிதழ்களில் வருகிறது. ஆனால் நமக்கு இந்தியே தெரியாததால் படிப்பதில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X