பெட்ரோல் கொள்முதல் நிறுத்தம் 'பங்க்' உரிமையாளர்கள் அறிவிப்பு

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை, எண்ணெய் நிறுவனங்கள் ஈடுசெய்ய வலியுறுத்தி, 'பங்க்' உரிமையாளர்கள், நாளை மறுநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து, தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி அறிக்கை:சில்லரை விற்பனையாளர்களுக்கு, 2017ல் இருந்து இதுவரை விளிம்பு தொகையை அதிகரித்து வழங்கவில்லை.


சென்னை : பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை, எண்ணெய் நிறுவனங்கள் ஈடுசெய்ய வலியுறுத்தி, 'பங்க்' உரிமையாளர்கள், நாளை மறுநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து, தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி அறிக்கை:சில்லரை விற்பனையாளர்களுக்கு, 2017ல் இருந்து இதுவரை விளிம்பு தொகையை அதிகரித்து வழங்கவில்லை. 2017ல், லிட்டர், 60 ரூபாயாக இருந்த பெட்ரோல் தற்போது, 104 ரூபாயாக உள்ளது. டீசல் லிட்டர், 52 ரூபாயில் இருந்து, 96 ரூபாயாக உயர்ந்துள்ளது.



latest tamil news




சிறப்பு கலால் வரி




இதனால், எங்களது நடைமுறை மூலதனம் உயர்ந்து, பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விளிம்பு தொகையாக பெட்ரோலுக்கு, 3.06 ரூபாயும்; டீசலுக்கு, 1.88 ரூபாயும் வழங்குகின்றன. இந்த விளிம்பு தொகையில், 70 சதவீதம் நிர்வாக செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது. விளிம்பு தொகை கட்டமைப்பு, 2010ல் உள்ள செலவினங்களுக்கான கணக்கீட்டை உள்ளடக்கியது. 13 ஆண்டுகளாகியும் அதே நிலை உள்ளது.மே 21ம் தேதி மத்தியஅரசால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியால், தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு, 9.12 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 6.68 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.


latest tamil news



சில்லரை விலை குறைப்பு




இதனால், அன்று 2 லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. எனவே, 2021 நவ., மற்றும் இம்மாதம், 21ம் தேதி சில்லரை விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை, முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடுசெய்ய வேண்டும்.இது குறித்து, எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 31ம் தேதி ஒரு நாள் மட்டும்,பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம். பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பெட்ரோல், டீசல் விற்பனை தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-மே-202205:43:08 IST Report Abuse
NicoleThomson முதலில் சாமானியனின் பெட்ரோலை திருடாமல் நிரப்ப முயற்சி செய்யுங்க அப்புறம் வேலை நிறுத்தம் செய்யலாம்
Rate this:
Cancel
29-மே-202216:35:31 IST Report Abuse
ஆரூர் ரங் காரின் 50 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 67 லிட்டர் பெட்ரோல் போட்டதாக பில். போன வாரம் தான் வீடியோ வெளியானது..பெரும்பாலான😛 பெட்ரோல் நிலையங்கள் காங்கிரசு திமுக ஆட்களுடையவை
Rate this:
Cancel
Rk -  ( Posted via: Dinamalar Android App )
29-மே-202214:41:10 IST Report Abuse
Rk gov, தான் மக்கள் வயிற்றில் அடிக்கிறது என்றால், இவனுக அதுக்கும் மேல திருட்டு பசங்களா இருக்கானுங்க, இப்போ மட்டும் உங்களுக்கு எரியுதா,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X