டிரைவர், கண்டக்டர்கள் இனி நேரடி தேர்வு இல்லை!

Added : மே 29, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : ''அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்கள் இனி, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாகத் தான் நிரப்பப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.சென்னையில் நேற்று, அடையாறு, திருவான்மியூர் பணிமனைகளில் ஆய்வு செய்த பின், மூன்று மாதங்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களிடம், அவர் பேசியதாவது:சாதாரண கட்டண பஸ்களில், மகளிருக்கு இலவச பயணம்
டிரைவர், கண்டக்டர்கள்  இனி நேரடி தேர்வு இல்லை!


சென்னை : ''அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்கள் இனி, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாகத் தான் நிரப்பப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.சென்னையில் நேற்று, அடையாறு, திருவான்மியூர் பணிமனைகளில் ஆய்வு செய்த பின், மூன்று மாதங்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களிடம், அவர் பேசியதாவது:சாதாரண கட்டண பஸ்களில், மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஏழை பெண்கள் வேலைக்கு செல்லவும், வியாபாரம் செய்யவும் உதவியாக உள்ளது.

அவர்களுக்கான கட்டணத்தை, அரசு செலுத்துகிறது. எனவே, அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டியது, ஓட்டுனர், நடத்துனர்களின் கடமை.போக்குவரத்துக் கழகங்கள், 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனாலும், அனைத்து பஸ்களையும் இயக்கி, பொது மக்களுக்கு உதவ வேண்டும். இனி, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வாயிலாகவே நிரப்பப்படும்.

அதனால், தனிப்பட்ட நபருக்கு வேலை அளிப்பது சாத்தியமில்லை. இந்நிலையில், ஏற்கனவே பணியில் இருப்போர் வேலையை சிறப்பாக செய்து, அவர்களின் குடும்பத்துக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் சிறப்பு சேர்க்க வேண்டும்.நீண்ட நாட்கள் பணிக்கு வராதோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதே வழக்கம். ஆனால், நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்; அதை உணர்ந்து பணியாற்றுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
29-மே-202214:03:12 IST Report Abuse
raja தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த EBF பணத்தை முதல்ல சம்பந்தப்பட்ட மத்திய அலுவலகத்துக்கு கண்டுங்க திராவிடமாடல் ஆட்சியாளர்களே....
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
29-மே-202208:01:09 IST Report Abuse
Duruvesan அப்போ இதுக்கும் நுழைவு தேர்வு உண்டா,? 😭😭 கர்த்தரின் seedar விடியல் ஆட்சியில் தேர்வு இனி கெடயாது அப்படின்னு சொன்னது எப்பவும் போல பொய் தானா?
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
29-மே-202207:41:42 IST Report Abuse
தமிழன் //இனி, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வாயிலாகவே நிரப்பப்படும்.// - மைண்ட் வாய்ஸ்..TNPSC இல் யார் வெற்றி பெற வேண்டும் என்பது 80% எங்களால் தீர்மானிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X