ரவுடி கொலை வழக்குதலைமறைவான௪ பேருக்கு வலை

Added : மே 29, 2022 | |
Advertisement
அரியாங்குப்பம்:அரியாங்குப்பத்தில் வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க அதிரடிப் படை போலீசார் தமிழக பகுதிக்கு சென்றுள்ளனர்.கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் பொடிமாஸ் என்கிற சரத்குமார், 27. அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த இவரை, கடந்த 26ம் தேதி ஒரு கும்பல் வீடு புகுந்து

அரியாங்குப்பம்:அரியாங்குப்பத்தில் வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க அதிரடிப் படை போலீசார் தமிழக பகுதிக்கு சென்றுள்ளனர்.கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் பொடிமாஸ் என்கிற சரத்குமார், 27. அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த இவரை, கடந்த 26ம் தேதி ஒரு கும்பல் வீடு புகுந்து வெட்டி கொலை செய்தது.இந்த கொலை தொடர்பாக 10 பேர் மீது வழக்கு அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த கொலை வழக்கில் ஜெனார்த்தனன் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் விழுப்புரம் அல்லது திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க அதிரப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட வர்களை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X