வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்து பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். தனக்கு தரப்பட்ட பிரமாதமான வரவேற்பை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார் பிரதமர்.
![]()
|
ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசியது மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளால் பிரதமர் கோபமடைந்துஉள்ளார் என்கின்றனர், பிரதமர் அலுவலக அதிகாரிகள்.தமிழக சட்டசபையில் 'ஜெய்ஹிந்த்' என சொல்ல முடியாமல் போனதை முந்தைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மோடிக்கு தெரிவித்துள்ளார். அதேபோல தற்போதைய கவர்னர் ரவியும் 'சட்டசபையில் நான் ஜெய்ஹிந்த் என சொன்னாலும், கவர்னரின் உரையை தமிழில் மொழி பெயர்க்கும் சபாநாயகர் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை தவிர்த்துவிடுகிறார்' என, மோடியிடம் சொல்லி உள்ளார்.
இதற்கு பதிலடியாகத்தான் பிரதமர் தன் பேச்சின் முடிவில் 'பாரத் மாதாகி ஜே, வந்தே மாதரம்' என சொன்னதோடு, பார்வையாளர்களையும் சொல்ல வைத்தார் என்கின்றனர், அதிகாரிகள். இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது.- வீடு வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடமிருந்து தள்ளி நின்றார். ஆனால், பிரதமரோ ஸ்டாலினின் கையைப் பிடித்து பக்கத்தில் நிறுத்தி, வீட்டின் சாவியை பயனாளிக்கு கொடுக்க வைத்தார்.
மோடிக்கு பக்கத்தில் நிற்கும் புகைப்படம் வந்தால் அது சிறுபான்மையினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என முதல்வர் நினைத்திருக்கலாம். அதனால் தான் பிரதமர் வேண்டுமென்றே முதல்வர் ஸ்டாலினை தன் அருகில் நிற்க வைத்துக் கொண்டார் என்கின்றனர், அதிகாரிகள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மோடியுடன் இணைந்து நிற்பதை தவிர்ப்பார்.
![]()
|
'ஸ்டாலின் மேடையில் பேசிய அனைத்தையும் ஏற்கனவே பிரதமரிடம் மனுவாக அளித்துவிட்டார். இதையே தனியாக கடிதம் வாயிலாகவும் தெரிவித்துவிட்டார். பின் அதையே மேடையில், அதுவும் பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு படித்தார். வேறு சரக்கு எதுவும் இல்லை போலிருக்கிறது' என, டில்லி பா.ஜ.,வினர் கிண்டலடிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement