மனைவி,இரண்டு குழந்தைகளின் கழுத்தறுத்து ஐ.டி., ஊழியர் தற்கொலை

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை : சென்னையில் இரு குழந்தைகள் மற்றும் மனைவியின் கழுத்தை, மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்து கொடூர மாக கொலை செய்த ஐ.டி., ஊழியர், தானும் தற்கொலை செய்து கொண்டார். திருமண நாளில் நடந்த இந்த விபரீத முடிவுக்கு, கடன் பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலுார், வெங்கடேஸ்வரா நகர், இஷ்டசக்தி விநாயகர்
மனைவி, குழந்தைகள்,   ஐ.டி., ஊழியர்

சென்னை : சென்னையில் இரு குழந்தைகள் மற்றும் மனைவியின் கழுத்தை, மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்து கொடூர மாக கொலை செய்த ஐ.டி., ஊழியர், தானும் தற்கொலை செய்து கொண்டார். திருமண நாளில் நடந்த இந்த விபரீத முடிவுக்கு, கடன் பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலுார், வெங்கடேஸ்வரா நகர், இஷ்டசக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 41. இவரது மனைவி காயத்ரி, 36. மகள் நித்யஸ்ரீ, 13; மகன் சாய்கிருஷ்ணா, 8. சோழிங்கநல்லுாரில் உள்ள சி.டி.எஸ்., நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராக பிரகாஷ் பணிபுரிந்து வந்தார். காயத்ரி, வீட்டின் அருகேயுள்ள வடிவேல் தெருவில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். மேலும், பொழிச்சலுார் மண்டல பா.ஜ., மகளிர் அணி செயலராகவும் இருந்தார்.காயத்ரியின் தந்தை அலறல்


மகள் நித்யஸ்ரீ, குன்றத்துார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், மகன் சாய் கிருஷ்ணா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று காலை, காயத்ரியின் தந்தை ரமணன், திருப்பதி லட்டுடன் மகள் வீட்டிற்கு வந்தார். அப்போது, கதவு மூடிஇருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்காததால், பக்கத்து வீட்டில் இருப்போரை அழைத்து வந்தார்.அவர்கள் வந்து பார்த்த போது, கதவு தாழிடப்படாமல், மூடிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. கதவை திறந்த போது, உள்ளே பிரகாஷ், அவரது மனைவி, குழந்தைகள் தனித்தனியாக ரத்த வெள்ளத்தில், கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தனர்.இதை பார்த்து காயத்ரியின் தந்தையும், அக்கம் பக்கத்தினரும் அலறினர். தகவலறிந்து சங்கர் நகர், குன்றத்துார் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆல்பின்ராஜ், சந்துரு ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.மரம் அறுக்கும் மிஷின்

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால், அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர். தாம்பரம் துணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, பல்லாவரம் உதவி கமிஷனர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை முடுக்கி விட்டனர்.மரம் அறுக்கும் மிஷினால், மனைவி, குழந்தைகளின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்த பிரகாஷ், தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது.மரம் அறுக்கும் இயந்திரம், பிரகாஷின் கழுத்தை அறுத்த நிலையில் அப்படியே கிடந்தது. பிரகாஷ்- -- காயத்ரி தம்பதிக்கு, நேற்று முன்தினம் திருமண நாள். அதை, குழந்தைகளுடன் கொண்டாடிய தம்பதி, மெரினா கடற்கரைக்கு சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.


latest tamil news


இரவு வீட்டிற்கு வந்த பின், பிரகாஷ் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிஉள்ளார். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவுக்கு பிரகாஷ் வந்ததாக தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் ஒவ்வொரு அறையிலும் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீசார், நான்கு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சுவரில் ஒட்டப்பட்ட கடிதம்

சம்பவம் நடந்த வீட்டை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பிரகாஷின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்.பின் அவர் கூறியதாவது: பிரகாஷ், மரம் அறுக்கும் மிஷினால் மனைவி, குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.'இந்த முடிவுக்கு யாரும் வற்புறுத்தவில்லை; நாங்களே எடுத்த முடிவு' என, ஆங்கிலத்தில் கடிதம் எழுதி சுவரில் ஒட்டியுள்ளார். அதன் ஒரு பிரதியை, நோட்டிலும் வைத்துள்ளார். இம்மாதம் 19ம் தேதி, 'அமேசான் ஆன்-லைன் ஷாப்பிங்'கில் மரம் அறுக்கும் மிஷினை பிரகாஷ் வாங்கியுள்ளார். இதனால், 19ம் தேதிக்கு முன் வரை, பிரகாஷின் மொபைல் போன்களில் யார் யார் பேசியுள்ளனர் என்பது குறித்தும், அதில் யாராவது கடன் கேட்டு தொல்லை கொடுத்தனரா; இந்த விபரீத முடிவுக்கு யாராவது துாண்டினரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்படும்.முதற்கட்ட விசாரணையில், 3.50 லட்சத்திற்கான கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரகாஷின் மனைவி, குழந்தைகள் அலறி துடித்தது போல் கால், கைகள் நகர்ந்ததாக தெரியவில்லை. அறையில் டம்ளர்கள் உள்ளதால், மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் மயங்கிய பின் கழுத்தை அறுத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே, உறுதியான தகவல் தெரியவரும்.இவ்வாறு போலீஸ் கமிஷனர் ரவி கூறினார்.அனைவரது நெற்றியிலும் திருநீறு

பிரகாஷ், அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றிய போது, அனைவரது நெற்றியிலும் திருநீறு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனால், அனைவரும் துாங்குவதற்கு முன் சுவாமி கும்பிட்டு, திருநீறு வைத்துக் கொண்டனரா அல்லது பிரகாஷ் மூன்று பேரையும் கொலை செய்து, நெற்றியில் திருநீறு வைத்தாரா என போலீசார் சந்தேகிக்கின்றனர்.அன்பாக பழகிய தம்பதி

பிரகாஷ்- - காயத்ரி தம்பதி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அன்பாக பேசி பழகியுள்ளனர். பிரகாஷ் வீட்டின் முன் மரம் இருப்பதால், அவ்வழியாக செல்வோர், சிறிது நேரம் மரத்தின் நிழலில் இளைப்பாறிச் செல்வது வழக்கம். அப்படி வருவோருக்கு, தண்ணீர், மோர் கொடுத்து உதவி செய்வது காயத்ரியின் வழக்கம் என அப்பகுதியினர் கூறினர்.


Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04-ஜூன்-202219:37:22 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy நால்வரையும் யாராவது (மற்றவர்கள்) கொன்று இருக்கலாம். தெரிந்து கொண்டது - மற்ற உயிர்களை பாருங்கள் (பறவை விலங்குகள்) பணம் சொத்து இதை மற்றவர்களுடன் கம்பேர் செய்வது வேண்டாம். தெய்வம் தேவை
Rate this:
Cancel
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-மே-202213:03:14 IST Report Abuse
john உண்மையிலே இது ஒரு வேதனையான சம்பவம்... கடவுள்தான் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கொடுக்கணும்.
Rate this:
Cancel
Jayanthi Srinivasan - chennai,இந்தியா
30-மே-202211:36:42 IST Report Abuse
Jayanthi Srinivasan குழந்தைகளை பார்க்கும் போது மனது வேதனை அடைந்தது. கடனுக்கு இதுதான் முடிவா. குழந்தைகள் செய்த பாவம் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X