இது உங்கள் இடம்: 2018ம் ஆண்டு அறிவிப்பு அமலுக்கு வருமா?

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது போல, ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என முதல்வர் ஸ்டாலினுக்கு, சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசுக்கே உரிய நிர்வாக ஆணைப்படி, சிறப்பு
 இது உங்கள் இடம்: 2018ம் ஆண்டு அறிவிப்பு அமலுக்கு வருமா?

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது போல, ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என முதல்வர் ஸ்டாலினுக்கு, சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசுக்கே உரிய நிர்வாக ஆணைப்படி, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அனேகமாக கருணாநிதி பிறந்த நாளான, ஜூன், 3 ல், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆறு பேரும் விடுவிக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை. அதற்கு முன்னதாக, சில நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ௨௦௧௮ல், மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், நாடு முழுதும் உள்ள சிறைகளில், நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வரும், சில வகை குற்றவாளிகளுக்கு பொதுக் கருணை காட்டி விடுவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரத்தில், குற்றவாளிகளை விடுவிப்பதில், சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதில், முதல் விதி, யார் யாருக்கு கருணை காட்டலாம் என்பது. இரண்டாவது விதி, யார் யாருக்கு கருணை காட்டக்கூடாது என்பதாகும். முதல் விதியின்படி, மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள், வரதட்சணை கொடுமை, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல் குற்றங்கள், பொடா, தடா போன்ற பயங்கரவாத தடுப்பு சட்டங்களால் தண்டிக்கப்பட்டவர்கள், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டம் வாயிலாக தண்டனை பெற்றவர்கள் மற்றும் ஊழல் குற்றவாளிகளுக்கு கருணை காட்டி, தண்டனையை குறைக்கக் கூடாது.
இதனால், முதல் விதியால் கருணை பெற்றவர் கூட, இரண்டாவது விதியால் கருணை பெறும் தகுதியை இழந்து விடுவார். இந்த பொது அறிவிப்பை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி, நிபுணர் குழு பரிந்துரைப்படி, தண்டனையை கவர்னர்கள் குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைதிகள் விடுதலை விஷயத்தில், ௨௦௧௮ம் ஆண்டு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள இந்த விதிமுறைகளை இனி பின்பற்ற, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடும்படி கோரி, காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதன் வாயிலாக, ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை தடுக்க முற்படலாம்.


latest tamil news
தற்போது நம் நாட்டில், கருணை காட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை விட, யாருக்கு எல்லாம் கருணை காட்டக்கூடாது என்பதற்கு தெளிவான சட்டம் இல்லை. இந்த ஒரே காரணத்தால் தான், உச்ச நீதிமன்றம் தனக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் பிரிவு, 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்துள்ளது.
எனவே, உடனடியாக மத்திய அரசும், நீதித்துறையும் இணைந்து, எந்தெந்த குற்றவாளிகளுக்கு கருணைக் காட்டக் கூடாது என்பதை உடனடியாக தீர்மானித்து, அதை பார்லிமென்டில் சட்டத் திருத்தமாக கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.அதற்கு, 2018ல் மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை ஒட்டி, மத்திய அரசு வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
30-மே-202217:14:10 IST Report Abuse
sankar .....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-மே-202215:56:48 IST Report Abuse
sankaseshan ஹிந்து அடிமையாக இருப்பதில் தவறில்லை தான் பின்பற்றும் மதத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும் அந்நிய மதத்துகு அடிமையாக இருக்க கூடாது மோடிஜி பிஜேபி இருக்கும் வரை திராவிட திருடர்கள் ஜம்பம் பலிக்காது
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
30-மே-202213:58:23 IST Report Abuse
Dhurvesh தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்: யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகம்
Rate this:
30-மே-202215:53:56 IST Report Abuse
ஆரூர் ரங்ஸ்டாலின் ஏன் நேரடியாகப் போய் விநியோகிக்கவில்லை? அங்குள்ள மக்களுக்கு ரோஷம் உண்டு. ஒரு கை பார்த்திருப்பார்கள். இறந்தது😓 ஒன்றிரண்ட ல்ல. ஒன்றரை லட்சம் சொந்தங்கள் . கொலைகார திமுக...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X