பீஹாரில் பா.ஜ., கூட்டணி முறிவு?

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
பீஹாரில், நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015 சட்டசபை தேர்தலில் லாலுவுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ.,வை தோற்கடித்து ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். ஆனால் இடையில் பிரச்னை வர, லாலுவை கழற்றிவிட்டு பா.ஜ., ஆதரவுடன் ஆட்சியை தொடர்ந்து வருகிறார்.பதவியை தக்க வைத்துக் கொள்ள எதுவும் செய்வார் நிதிஷ். இது தான் அவரது அரசியல்.வரும் 2025ல் இங்கு
 
பீஹார்,  கூட்டணி முறிவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஹாரில், நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015 சட்டசபை தேர்தலில் லாலுவுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ.,வை தோற்கடித்து ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். ஆனால் இடையில் பிரச்னை வர, லாலுவை கழற்றிவிட்டு பா.ஜ., ஆதரவுடன் ஆட்சியை தொடர்ந்து வருகிறார்.

பதவியை தக்க வைத்துக் கொள்ள எதுவும் செய்வார் நிதிஷ். இது தான் அவரது அரசியல்.வரும் 2025ல் இங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நிதிஷ் குமார் திடீரென லாலு கட்சியுடன் மீண்டும் நட்பை தொடர ஆரம்பித்துவிட்டார். உடனே பா.ஜ., தன் வேலையை ஆரம்பித்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா களத்தில் இறங்கினார்.


latest tamil news





ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதில் நடந்த ஊழலை சி.பி.ஐ., விசாரிக்க ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக, அந்த சமயத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலுவின் உறவினர்களுக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்துள்ளது அந்த அமைப்பு.விரைவில் லாலு யாதவின் உறவினர்கள் கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. ஊழலுக்கு எதிரானவர் என அழைக்கப்படும் நிதிஷ், எப்படி லாலுவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க முடியும் என பலரும் பேசுவதால், சற்று பின் வாங்கியுள்ளார் நிதிஷ் குமார்.இதற்கிடையே துணை ஜனாதிபதி பதவியை நிதிஷ் குமாருக்கு அளிக்க வாய்ப்புள்ளது என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் நிதிஷ் குமாரை, பிரதமர் மோடி நம்பத் தயாராக இல்லை என்றும் சொல்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-மே-202217:01:48 IST Report Abuse
J.V. Iyer அடுத்த தேர்தலுக்குப்பிறகு பாஜக ஆட்சி?
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
29-மே-202213:23:47 IST Report Abuse
Raj உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஆள் என்றால் OPS க்கு ஜனாதிபதி பதவி கொடுக்கலாம்
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
29-மே-202212:56:34 IST Report Abuse
TRUBOAT கூட இருந்து குழி பறிப்பதில் வல்லவர்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X