புதுடெல்லி: இரண்டாண்டுகளுக்கு பின் இந்தியா -வங்கதேசம் இடையே இன்று முதல் மீண்டும் பயணிகள் ரயில் சேவை துவங்குகிறது.
கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்தியா -வங்க தேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
![]()
|
தற்போது தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் சில இடங்களில் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயணிகள் ரயில் சேவை இன்று (மே 29) முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டாக்காவில் இருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் வங்கதேச ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவில் இருந்து இந்திய ரயில்வே ரேக் மூலம் மே 29, 2022 அன்று மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளிட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement