பாட்னா : நாட்டிலேயே மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக கருதப்படும் பீஹாரின் ஜமூய் மாவட்டத்தில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஜமூய் மாவட்டத்தில், மிகப் பெரிய அளவுக்கு தங்கம் இருப்பதாக, இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, 37 ஆயிரத்துக்கு 600 கிலோ எடையுள்ள தங்க தாது கிடைக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, நாட்டின் மொத்த தங்க மண்ணில் 44 சதவீதம் என கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜமூய் மாவட்டத்தில், அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, தேசிய புவியியல் ஆய்வு அமைப்பு மற்றும் தேசிய தாதுப் பொருள் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE