கேரளாவுக்கு ஆதரவாக கோவை எம்.பி.,: ரயிலை திருப்புவதில் இரட்டை வேடம்!

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
பாலக்காடு - திருச்செந்துார் ரயிலை, கோவைக்கு திருப்ப வேண்டுமென்று, ஆறு எம்.பி.,க்கள் கடிதம் கொடுத்தபோது, மா. கம்யூ., கட்சியை சேர்ந்த கோவை எம்.பி., கடிதம் கொடுக்காமல், இப்போது பேருக்கு கடிதம் அனுப்பியிருப்பதால், இந்த ரயில் இன்று வரை திருப்பப்படவில்லை.முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான மூன்று கோவில்களை இணைக்கும் வகையில், திருச்செந்தூரிலிருந்து மதுரை வழியாக பழநிக்கு
கேரளா எம்பி, நடராஜன், ரயில், கேரளா, இரட்டை வேடம்

பாலக்காடு - திருச்செந்துார் ரயிலை, கோவைக்கு திருப்ப வேண்டுமென்று, ஆறு எம்.பி.,க்கள் கடிதம் கொடுத்தபோது, மா. கம்யூ., கட்சியை சேர்ந்த கோவை எம்.பி., கடிதம் கொடுக்காமல், இப்போது பேருக்கு கடிதம் அனுப்பியிருப்பதால், இந்த ரயில் இன்று வரை திருப்பப்படவில்லை.

முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான மூன்று கோவில்களை இணைக்கும் வகையில், திருச்செந்தூரிலிருந்து மதுரை வழியாக பழநிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க, மதுரை கோட்டம் சார்பில் முன் மொழியப்பட்டது. பொள்ளாச்சி --- போத்தனூர் இடையே ரயில்பாதை மாற்றும் பணி முடிந்தவுடன், அதே ரயிலை கோவைக்கும் மேட்டுப்பாளையத்திற்கும் நீட்டிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை.திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சி வரை முற்றிலும் முன்பதிவுடன் இயக்கப்படவிருந்த இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டுமென்று, தமிழக எம்.பி,க்கள் சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), வேலுசாமி (திண்டுக்கல்), வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ராஜா (நீலகிரி), ஞானதிரவியம் (திருநெல்வேலி) ஆகிய ஆறு பேரும், ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினர். கோவை எம்.பி.,நடராஜன், அப்போது கடிதம் அனுப்பவில்லை.


வலியுறுத்தல்கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., கட்சியின் தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன், டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்தே மனு கொடுத்தார். மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். கோவை, பொள்ளாச்சி தொழில் மற்றும் வர்த்த சபை கிளைகள், 180 தொழில் மற்றும் வணிக அமைப்புகளும் இந்த கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தி வந்தன.

பல்வேறு கிராம ஊராட்சிகளிலும் கூட, இதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் பெட்டிஷனிலும் இரண்டாயிரம் பேர் கையெழுத்திட்டிருந்தனர். அதன் எதிரொலியாக, கடந்த ஜனவரி 15லிருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இந்த ரயில், அதற்கு முந்தைய நாளில் தற்காலிகமாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்டது.


கேரள எம்.பி.,க்கள் முற்றுகைஆனால் அதற்கு மறுநாளே, திருச்செந்துார்- பாலக்காடு இடையே முற்றிலும் முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென்று மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ரயிலை, கோவைக்கு திருப்ப வேண்டுமென்று, தமிழகம் சார்பில் கோரிக்கை விடுப்பது தெரிந்ததும், டில்லியில் உள்ள ரயில்வே பவனை மா.கம்யூ., கட்சியை சார்ந்த கேரளாவின் ராஜ்யசபா எம்.பி., ஜான் பிரிட்டோ தலைமையிலான கேரளா எம்.பி.,க்கள் குழு முற்றுகையிட்டுள்ளது.

அன்று மாலையே, தமிழக எம்.பி.,க்களின் கருத்தை அறிய, ரயில்வே வாரியம் முயற்சி செய்து, அது முடியவில்லை என்று கூறி, ஒருதலைப்பட்சமாகஇந்த ரயிலை பாலக்காடுக்கு திருப்பி விட்டுள்ளது. கோவை எம்.பி., நடராஜன், அந்த நேரத்தில் தலையிட்டு கடிதம் கொடுத்திருந்தால், இந்த ரயில் கோவைக்குத் திருப்பப்பட்டிருக்கும்; ஆனால் கேரளாவில் ஆட்சியிலுள்ளதங்களது கட்சி எம்.பி.,க்கள் கொடுத்த கோரிக்கைக்கு எதிராகக் கடிதம் கொடுக்காமல், கோவை எம்.பி., தவிர்த்திருப்பது நன்றாகத் தெரிகிறது.


மக்கள் அதிருப்திபா.ஜ., கட்சியின் மத்திய அமைச்சர், மாநிலத் தலைவர், எம்.எல்.ஏ., பலரும் இதற்காக கோரிக்கை வைத்த பின், தான் கேட்காமல் இருந்தால் தவறாகி விடுமென்று, கடந்த 16ம் தேதியன்று தான் இதற்காக ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இப்போது வரை இந்த ரயில், கோவைக்கு திருப்பப்படவில்லை. இது கோவை மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது கோவை எம்.பி., களமிறங்கி இந்த ரயிலை கோவைக்கு திருப்புவதற்கு போராட வேண்டுமென்று கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


latest tamil news
பேருக்காக ஒரு கடிதம்!திருச்செந்துார் ரயிலை, கோவைக்கு திருப்ப வேண்டுமென்று, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, 2021 ஜூலை 26லேயே திண்டுக்கல் எம்.பி., வேலுசாமி கடிதம் அனுப்பியுள்ளார். பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், கடந்த நவ.,15லும், நீலகிரி எம்.பி.,ராஜா, கடந்த டிச.,14லும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், கடந்த டிச., 16லும், திருநெல்வேலி எம்.பி, ஞானதிரவியம், கடந்த ஜன.,6 லும் மத்திய ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதங்கள் எழுதியுள்ளனர்.

மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி.,வெங்கடேசனும், காங்., கட்சியைச் சேர்ந்த விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூரும், பல மாதங்களுக்கு முன்பே இதற்காக கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் கோவை எம்.பி.,நடராஜன், கடந்த 16ம் தேதியன்றுதான், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, கடிதம் எழுதியுள்ளார். அதுவும் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியதாகத் தெரியவில்லை. இதனால் 'நானும் ஜெயிலுக்கு போகிறேன்' என்பதைப் போல, 'நானும் கடிதம் எழுதியுள்ளேன்' என்று 'கடமை'யாற்றியுள்ளார் என்பது தெரிகிறது.-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
29-மே-202217:55:39 IST Report Abuse
sankar இன்னொரு விஷயம் - திருவாளர் தனுசுகோடி ஆதித்தன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை வருவது தடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தது - பஸ் முதலாளிகள் விருப்பம் - அவர் போன பிறகுதான் அங்கே ரயில் வந்தது -
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
29-மே-202216:06:32 IST Report Abuse
Darmavan மலையாளதான் புத்தி எப்போவும் இப்படித்தான்
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
29-மே-202215:30:50 IST Report Abuse
Soumya இங்க மோடிக்கு எதிராக ஊளையிடும் பாவாட்ஸ் இதுக்கு மட்டும் வாய் திறக்கமாட்டானுங்க ....த்தூ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X