வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பயணிகள் விமானம் மாயமானது. அதனை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், கோவாங் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்தவர்களின் நிலை குறித்து உறுதியான தகவல் ஏதும் இதுவரை கிடைக்க பெறவில்லை.

பொக்காரோ என்னுமிடத்திலிருந்து ஜோம்சன் நோக்கி தார் ஏர் விமானம் கிளம்பியது. தலகிரி என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் எங்கு சென்றது என்ற விவரம் இல்லை. நேபாள விமான மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போன விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் , 3 விமான ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்துள்ளனர்.
5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த விமானம் கோவாங் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானம் குறித்தும், அதில் பயணித்தவர்களின் நிலை குறித்தும் உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். தேடும் பணியில் உதவிடும் படி அக்கிராம மக்களுக்கு நேபாள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE