இந்தியாவுடன் வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்த சீனாவை, தற்போது அமெரிக்கா முந்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் பலப்படுத்தப்பட்டு வருவதை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2020- 21ம் நிதியாண்டில் இந்தியா - அமெரிக்கா இடையே 80.51 பில்லியன் டாலர் ஆக இருந்த வர்த்தகம்,
US, India, Trading Partner, Surpasses, China, இந்தியா, வர்த்தகம், சீனா, அமெரிக்கா,

புதுடில்லி: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்த சீனாவை, தற்போது அமெரிக்கா முந்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் பலப்படுத்தப்பட்டு வருவதை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2020- 21ம் நிதியாண்டில் இந்தியா - அமெரிக்கா இடையே 80.51 பில்லியன் டாலர் ஆக இருந்த வர்த்தகம், கடந்த 21 - 22 நிதியாண்டில் 119.42 பில்லியன் டாலர் ஆக மாறியுள்ளது.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் 51.62 பில்லியன் டாலர் ஆக இருந்த ஏற்றுமதி, இந்த நிதியாண்டில் 76.11 பில்லியன் டாலர் ஆகவும், இறக்குமதியும் 29 பில்லியன் டாலரில் இருந்து 43.31 பில்லியன் டாலர் ஆகவும் அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், சீனாவுடனான வர்த்தகம் 2020-21நிதியாண்டில் 86.4 பில்லியன் டாலர் ஆக இருந்தது, 21- 22 நிதியாண்டில் 115.42 பில்லியன் டாலர் ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவிற்கான ஏற்றுமதியும் 21.18 பில்லியன் டாலரில் இருந்து 21.25 பில்லியன் டாலர் ஆக அதிகரித்தது. அதேபோல், இறக்குமதியும் 65.21 பில்லியன் டாலரில் இருந்து 94.16 பில்லியன் டாலர் ஆனது.


latest tamil news



இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால் வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரிக்கவே செய்யும். சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா மாறி வருகிறது. சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க துவங்கியுள்ள சர்வதேச நிறுவனங்கள், அந்நாட்டில் இருந்து இறுக்குமதி மற்றும் அங்குள்ள தொழில் ஆகியவற்றை இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு கவனத்தை திருப்பி உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
premprakash - vellore,இந்தியா
30-மே-202211:38:33 IST Report Abuse
premprakash புள்ளி விவரங்களை பார்க்கும் போது, சீனா தான் இந்தியாவிடம் நல்ல ஆதாயம் பெருகேறது. வெட்கக்கேடு என்னவென்றால் ஏற்றுமதி ஏறவில்லை, ஆனால் இறக்குமதி 60 சதவீதம் ஏறிவுள்ளது...அதாவது சீனாவிடம் வாங்கி அப்படியே அமெரிக்காவிடம் விற்கிறார்கள். இந்தியாவின் மேக் இன் இந்தியா பவுசு லட்சணம் இதுதான்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-மே-202216:53:35 IST Report Abuse
J.V. Iyer நல்ல தரமான பொருட்களை ஏற்றுமதி செய்தால், இது மென்மேலும் வளரும்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
29-மே-202215:11:06 IST Report Abuse
Tamilan சீனாவுடன் அதே வியாபாரம் செய்ய முடிந்தால் பக்கத்துக்கு நாட்டுடன் செய்வதுதான் புத்திசாலித்தனம் . DIPLOMACY
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X