ஆதார் கார்டு நகல் பயன்பாடு சர்ச்சை: மத்திய அரசு விளக்கம்

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: ஆதார் கார்டு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், அதன் நகலை யாரிடமும் பகிர வேண்டாம் என விடப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் என விளக்கமளித்துள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்துவதிலும், பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல்
Aadhaar, photocopy, UIDAI, Aadhaar card, ஆதார், ஆதார் அட்டை

புதுடில்லி: ஆதார் கார்டு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், அதன் நகலை யாரிடமும் பகிர வேண்டாம் என விடப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் என விளக்கமளித்துள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்துவதிலும், பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆதார் அட்டை நகலை யாரிடமும் வழங்க வேண்டாம். ஆதார் நகலை பெறும் நிறுவனங்கள் அதை தவறாக பயன்படுத்தக்கூடும். மாஸ்க்ட் ஆதார்( மறைக்கப்பட்ட ஆதார்) எனப்படும் கடைசி 4 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டையினை பயன்படுத்தவும். இதனை யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பிரவுசிங் சென்டர்கள், பொது கணினியில் மின்னணு ஆதாரை பதிவிறக்கம் செய்யவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஆதார் விவரங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை அங்கிருந்து அழித்துவிட வேண்டும் எனக்கூறியிருந்தது.


latest tamil news

வாபஸ்

இந்நிலையில், ஆதார் அட்டை நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்திரிகை செய்தியை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதை கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - Chennai,இந்தியா
29-மே-202217:37:58 IST Report Abuse
suresh எவ்வளவு கேவலம்? சீ சீ மக்கள் என்ன கிள்ளு கீரையா?
Rate this:
Cancel
29-மே-202217:08:10 IST Report Abuse
அப்புசாமி கூறு கெட்டவங்க....
Rate this:
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-மே-202215:56:06 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan too late .. we gave to many places ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X