100 பேரின் வங்கிக்கணக்கில் ரூ.13 கோடி வரவு! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கி கிளையில் இருந்து 100 வங்கிக்கணக்குகளுக்கு தலா ரூ.13 கோடி பணம் வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய மென்பொருளை நிறுவிய போது ஏற்பட்ட குளறுபடியே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.சென்னை தி.நகரில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக,
hdfc, account, வங்கி, எச்டிஎப்சி, வங்கி

சென்னை: சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கி கிளையில் இருந்து 100 வங்கிக்கணக்குகளுக்கு தலா ரூ.13 கோடி பணம் வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய மென்பொருளை நிறுவிய போது ஏற்பட்ட குளறுபடியே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக குறிப்பிட்ட 100 வங்கிக்கணக்கை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கி விசாரணை நடத்தினர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


latest tamil news


இதனிடையே, வங்கி சர்வரில் புதிய மென்பொருளை நிறுவியதே குளறுபடிக்கு காரணம் என தகவல் தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும் போது, வரவு பக்கத்தில் குழப்பம் ஏற்பட்டு பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், சில கிளைகளில் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சரியாகும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
30-மே-202205:01:58 IST Report Abuse
Girija பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். வாடிக்கையாளர்கள் kyc க்கும், ட்ரான்ஸாக்ஷன் டாட்டா வும் டேட்டாபேஸில் வெவ்வேறு இடத்தில சேமிக்கப்படும். ட்ரான்ஸாக்ஷன் அதாவது வரவு /செலவு என்ட்ரியில் கை வைக்காமல் இதை செய்ய முடியாது. தனியார் வங்கிகள் உங்கள் அக்கவுண்டில் இருந்து அவர்கள் சர்விஸ் சார்ஜ் அது இது என்று கழிக்கும் தொகைக்கு SMS அனுப்புவது கிடையாது, ஆக்சிஸ் இதில் எமகதக வங்கி. தனியார் வங்கி பக்கம் போகாமல் இருப்பதே நல்லது. வீட்டு கடன் வாங்கி இருப்போர் உடனே மீதம் உள்ள கடன் தொகையை சரிபார்த்து கொள்வது நல்லது floating interest rate விகிதம் அதிகரித்துள்ளது, அதனால் ஈ எம் ஐ அதிகரிக்கும் ஆனால் வங்கிகள் இது பற்றி உங்களுக்கு தகவல் அனுப்பாது . நீங்கள் பழைய ஈ எம் ஐ தொடர்ந்து கட்டினால், அதிகரிக்கப்பட்ட வட்டி தொகை மீதம் இருக்கும், அதற்கு பெனால்டி மேல் பெனால்டி போட்டு ஈ எம் ஐ கூடுதலாக கட்ட வேண்டும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள் .
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
29-மே-202219:12:58 IST Report Abuse
Anantharaman Srinivasan இதேபோல் தவறுதலாக வாடிக்கையாளர் பணத்தை எடுக்காமலிருக்கணும்.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
29-மே-202218:56:06 IST Report Abuse
தியாகு ஒரு ஆசிரியர் இமயமலையில் இருக்கும் பனிக்கட்டிகளை ஒரு அண்டாவில் அடுக்கினால் பதினைந்து லட்சம் அண்டாக்களில் அடுக்கலாம் அவ்வளவு பனிக்கட்டிகள் இமயமலையில் இருக்கிறது என்று ஒரு உதாரணத்திற்கு சொன்னாராம். கடைசி பெஞ்சில் இருந்து ஒரு மக்கு மாணவன் எழுந்து எங்கே எனது பதினைந்து லட்சம் அண்டா பனிக்கட்டிகள் என்று கேட்டானாம். அவன் வேறு யாருமல்ல, கட்டுமரத்தின் திருட்டு திமுகவின் சமச்சீர் கல்வியை படித்தவனாம். மற்றபடி இந்த கதைக்கும் மோடிஜிக்கும் , உபிஸ்களுக்கும் சம்பந்தம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X