சென்னை: மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆவடி மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை மாநகராட்சி கமிஷனராக சிம்ரன்ஜித் சிங் கலோனும்
கோவை மாநகராட்சி கமிஷனராக பிரதாப்பும்
திருச்சி மாநகராட்சி கமிஷனராக வைத்தியநாதனும்
நெல்லை மாநகராட்சி கமிஷனராக சிவகிருஷ்ணமூர்த்தியும்

நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக ஆனந்த் மோகனும்
ஆவடி மாநகராட்சி கமிஷனராக தர்பகராஜ்ஜூம்
நகராட்சி நிர்வாக இணை கமிஷனராக விஷ்ணு சந்திரனும்
கால்நடை, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை இணை செயலாளராக ரஞ்சித் சிங்கும்
தமிழக விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயனும்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக விஜயலட்சுமியும்
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சப் கலெக்டராக ரிஷாப்பும்
கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக சங்கரும்
சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகாவும்
சேலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக பாலசந்தரும்
மதுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக சரவணனும்
சென்னை மாநகராட்சி குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக ராஜகோபால் சுங்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் தலைமை செயலாளர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE