யுடியூப்பர் கார்த்திக் கோபிநாத் திடீர் கைது: ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் தமிழக போலீஸ்| Dinamalar

யுடியூப்பர் கார்த்திக் கோபிநாத் திடீர் கைது: ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் தமிழக போலீஸ்

Updated : மே 30, 2022 | Added : மே 30, 2022 | கருத்துகள் (315) | |
சென்னை: பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கந்தக்குமார் ஆகியோர் அவசர கதியில் கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர்
யுடியூப்பர், கார்த்திக்கோபிநாத், கைது, கண், வெண்ணெய், சுண்ணாம்பு, தமிழக போலீஸ்

சென்னை: பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கந்தக்குமார் ஆகியோர் அவசர கதியில் கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் ஜூன் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திக் கோபிநாத் மற்ற யடியூப்பர்களை போல் இல்லாமல், நாகரீகமாகவும் விருப்பு வெறுப்பு இன்றியும் தமிழக அரசியலை விமர்சனம் செய்பவர். ஆளுங்கட்சி மீது விமர்சனம் வைத்தாலும், தனது கருத்துகளை நாகரீகமாக பதிவு செய்பவர். எந்த சூழ்நிலையிலும் அநாகரீகமான வார்த்தைகளையோ, ஆபாசமான கருத்துகளையோ கூறாதவர். இவர் சமீபகாலமாக, ஆளும் திமுக அரசு பற்றி விமர்சனம் செய்து வந்தார்.அவரை ஆவடி போலீசார், திடீர் என கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது என்ன குற்றச்சாட்டுகளை வைத்து வழக்கை ஜோடிக்கலாம் என்று நீண்ட நேரம் போலீசார் ஆலோசித்ததாக தெரிகிறது.இதற்கு காரணம், ஆளும் கட்சியை விமர்சனம் செய்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டதை கோர்ட் ஏற்கவில்லை. ஏனெனில், கைது செய்ததற்காக வலுவான காரணங்களை போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், கோர்ட்டின் கண்டனத்திற்கும் போலீசார் ஆளாகி, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.latest tamil news


இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‛‛கார்த்திக் கோபிநாத் விஷயத்தில் கோர்ட்டிடம் குட்டு வாங்கக் கூடாது என்பதில் ஆவடி போலீஸ் கவனமாக இருக்கிறது. கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளாகாமல் கார்த்திக் கோபிநாத்தை எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யலாம் என்று போலீசார் ஆலோசித்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் அவர் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டிருக்கலாம் '' என்றார்.சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‛‛அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் போலீசார் ஒருதலைப்பட்சமாக நடக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் பற்றி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் கருத்து தெரிவித்த யடியூப்பர்களை கைது செய்ய வேண்டும் என்று சிவனடியார்கள் நுாற்றுக்கணக்கில் கூடி போராடினர். ஆனால், போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஆளுங்கட்சியை நாகரீகமாக விமர்சனம் செய்த கார்த்திக்கோபிநாத்தை அவசர கதியிலும், அதிவேகத்திலும் கைது செய்துள்ளனர். இவரை கைது செய்த வேகத்தை, தொடர்ந்து ஹிந்து மதம் மீது அவதுாறுகளை பரப்பும் மற்ற விமர்சகர்களிடம் ஏன் போலீஸ் காட்டுவதில்லை. ஆளும் திமுக அரசு, இந்த விஷயத்தில் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது'' என்றனர்.கைது புரியவில்லை


இது தொடர்பாக பிரபல விளையாட்டு மற்றும் அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கூறும் போது, கோபிநாத் வழக்கு தொடர்பாக பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி கேவி முனுசாமி என்னிடம் கூறும்போது, இந்து சமய அறநிலையத்துறை, கொள்முதல் செய்வதற்கு நேரடியாக பணம் செலுத்துவது கிடையாது. தங்கள் சார்பில், நன்கொடையாளர்களை பணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளும். சிறுவாச்சூர் கோவில் சிலைகளுக்கும் பக்தர்கள், முன்பணம் செலுத்தியுள்ளனர்.

பணிகள் நிறைவடையும் தருவாயில் இருந்த தனியார் கோவிலுக்கும் பக்தர்கள் பணம் செலுத்தியுள்ளதாக முனுசாமி கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிறுவாச்சூரில் உள்ள கோவிலுக்கான சிலைகள் செதுக்கும் பணி, புதுச்சேரியின் வில்லியனூர் அருகே நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தன்னை அணுகிய கார்த்திக் கோபிநாத், மக்களிடம் பணம் வசூலித்து நிதி வழங்கப்படும் எனவும், 33 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியதாக முனுசாமி தெரிவித்தார்.

பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக கூறியுள்ள முனுசாமி, சிலைகள் விரைவில் தயாராகிவிடும் என்றார். இதற்கான பணத்தை இந்து சமய அறநிலையத்துறை செலுத்தவில்லை எனவும் முனுசாமி என்னிடம் கூறினார்.

வசூலிக்கப்பட்ட பணம் சில பக்தர்களுக்கு பயன்படுத்தப்படும் எனக்கூறிய கார்த்திக்கோபிநாத் முனுசாமியிடம் கூறினார். அதேநேரத்தில், பணிகளை விரைவாக துவக்குவதற்கு முன்பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் கார்த்திக் கோபிநாத் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது புரியவில்லை. விரைவில் உண்மைகள் வெளியே வரும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X