திருச்சி மாநகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Added : மே 30, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
திருச்சி:நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றும்(மே 30), நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார்.அதற்காக, தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், உறையூரில் உள்ள தி.மு.க., பிரமுகர் செல்வேந்திரன் வீட்டிற்கு சென்றார்.திரும்பும் வழியில், பகல் 12.15 மணியளவில், திருச்சி மாநகராட்சிக்கு சென்ற அவர், குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்த பொது
Corporation,D.M.K,M.K.Stalin,Stalin,Thiruchirapalli,தி.மு.க,திருச்சி,மாநகராட்சி,ஸ்டாலின்

திருச்சி:நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றும்(மே 30), நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார்.

அதற்காக, தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், உறையூரில் உள்ள தி.மு.க., பிரமுகர் செல்வேந்திரன் வீட்டிற்கு சென்றார்.

திரும்பும் வழியில், பகல் 12.15 மணியளவில், திருச்சி மாநகராட்சிக்கு சென்ற அவர், குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்த பொது மக்களிடம், கோரிக்கை மனுக்களைப் பெற்றார். நேரடியாகவும் சிலரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேருவும் அவருடன் இருந்தார். முதல்வரின் திடீர் வருகையால், மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர் .

சுமார் 15 நிமிடம் அங்கு இருந்து, மாநகராட்சி ஆவணங்களையும் ஆய்வு சரி பார்த்த முதல்வர் ஸ்டாலின், டி.வி.எஸ். அருகில் உள்ள சுற்றுலா மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுத்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
30-மே-202218:14:01 IST Report Abuse
sethusubramaniam முதல்வர் ஆய்வு செய்வது நல்லதுதான் . ஆனா மேயரை மறுபடியும் மாத்திடாமே இருக்கணும்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-மே-202217:27:37 IST Report Abuse
வெகுளி //சுற்றுலா மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுத்தார்//.... மற்றதெல்லாம் தேவையில்லாத ஆணி.... ஏனிந்த பில்டப்பு ?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-மே-202216:51:28 IST Report Abuse
Natarajan Ramanathan ஆய்வு செய்வதற்கு எல்லாம் ஏதாவது விஷய ஞானம் வேண்டும். ஒன்றுமே தெரியாத ஒரு தத்தி என்னத்தை ஆய்வு செய்தானோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X