காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே பிரதானம்: மோடி தாக்கு

Updated : மே 31, 2022 | Added : மே 31, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
இட்டாநகர்: கடந்த காங்., ஆட்சியில் ஊழல்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் எங்களின் ஆட்சியில் வளர்ச்சிக்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம் என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.சிம்லாவில் நடந்த மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். விழாவில் விவசாயிகளுக்கு வழங்கும் நிதியை இன்று பிரதமர் மோடி விடுவித்தார். இதன்படி 10

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இட்டாநகர்: கடந்த காங்., ஆட்சியில் ஊழல்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் எங்களின் ஆட்சியில் வளர்ச்சிக்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம் என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.latest tamil newsசிம்லாவில் நடந்த மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். விழாவில் விவசாயிகளுக்கு வழங்கும் நிதியை இன்று பிரதமர் மோடி விடுவித்தார். இதன்படி 10 கோடி விவசாயிகளுக்கு இன்று மொத்தம் 21 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது.
சாதனை விளக்க கூட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
சிம்லாவுக்கும் , எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிம்லா எனது கர்ம பூமி. பல வீர, தீர தியாகங்களை கெண்டது சிம்லா. இங்குள்ள மக்கள் என் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் நான் மேலும் கூடுதலாக உழைக்க வேண்டும். கடந்த 2014ல் நாடு முழுவதும் ஊழலும், கொள்ளையும் பெருகி இருந்தது. இது தான் தலைப்பு செய்தியாக இருந்தது. இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றனர். ஆனால் தற்போது இது தடுக்கப்பபட்டு நாடு வளர்ச்சி நோக்கி செல்கிறது. நலத்திட்டங்களும், வளர்ச்சி பணிகளும் முக்கிய செய்தியாக இடம்பெறுகிறது. கடந்த ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்தினர். நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுகிறோம்.


latest tamil newsகடந்த காலத்தில் முத்தலாக்கை நினைத்து பலரும் அஞ்சி இருந்தனர். நமது எல்லையில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பு மிக சிறப்பாக உள்ளது. ஆதார், ஜன்தன் பணி சிறப்பாக முடித்துள்ளோம். நாட்டின் வளர்ச்சியே நமது அரசின் முக்கிய நோக்கம். ஆட்சியும், சேவையும் எங்களுக்கு சமமானது. ஏழைகள் முன்னேற்றத்திற்கான அரசு எங்கள் அரசு. இவ்வாறு மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31-மே-202220:35:38 IST Report Abuse
Ramesh Sargam காங்கிரஸ் கட்சியினர் அன்று செய்த ஊழல், இன்று அவர்களை வாட்டி வதைக்கிறது. 'முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்'.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
31-மே-202220:01:26 IST Report Abuse
Sivagiri இன்னும் செத்த பாம்பான காங்கிரசை எதிர்ப்பதிலேயே டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் , பல மலை பாம்புகள் ஸ்டேட் லெவெலில் சுத்தி வந்து நாட்டை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன , தமிழ்நாடு, கேரளா , ஆந்திரா , பெங்கால் , மும்பை , இங்கெல்லாம் மலை முழுங்கி மலைப்பாம்புகள் இல்லையா ? டில்லி பஞ்சாபி இங்கெல்லாம் அர்பன் நக்ஸல்கள்கள் பெருத்து விட்டார்கள் , சிபிஐ , ஈடி , ஐடி - என்று எல்லா வலையையும் வீசி புடிச்சு திகார் கூண்டில் அடைக்க வேண்டாமா ? ,. . .
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
31-மே-202219:50:24 IST Report Abuse
மனிதன் உங்க ஆட்சியில 'வடை'யே பிரதானம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X