4,000 குழந்தைகளுக்கு பிரதமர் கடிதம்

Updated : மே 31, 2022 | Added : மே 31, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : கொரோனா பாதிப்பால் பெற்றோர் அல்லது காப்பாளரை இழந்த, 4,000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார். 'பி.எம்.கேர்ஸ்' நிதியம் வாயிலாக கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்த கையேட்டை பிரதமர் மோடி டில்லியில் வெளியிட்டார். தாயின் அன்புஅத்துடன், கொரோனாவால் பெற்றோரை


புதுடில்லி : கொரோனா பாதிப்பால் பெற்றோர் அல்லது காப்பாளரை இழந்த, 4,000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார். 'பி.எம்.கேர்ஸ்' நிதியம் வாயிலாக கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்த கையேட்டை பிரதமர் மோடி டில்லியில் வெளியிட்டார்.



latest tamil news




தாயின் அன்பு




அத்துடன், கொரோனாவால் பெற்றோரை இழந்த, 4,௦௦௦க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பிரதமர் மோடி தனித் தனியாக கடிதம் எழுதிஉள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. இதில் மோடி கூறியிருப்பதாவது: குழந்தைகளின் பொன்னான எதிர்காலத்திற்கு, பி.எம்.கேர்ஸ் திட்டம் துணை புரியும். நீங்கள் சுதந்திரமாக கனவு காணலாம். அந்த கனவுகளை நிறைவேற்ற இந்த திட்டம் உதவும். நீங்கள் சந்தித்த சம்பவம் என் குடும்பத்திலும் நிகழ்ந்துஉள்ளது.நுாறு ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகளில் பெருந்தொற்று ஒன்று பரவியது. அதில், என் தாய்வழிப் பாட்டி உயிரிழந்தார். அப்போது என் தாய்க்கு தன் தாயாரின் முகத்தை கூட நினைவில் கொள்ள முடியாத வயது. அதன் பின், தன் வாழ்க்கை முழுதும் தாயின் அன்பும், அரவணைப்புமின்றி என் தாய் வாழ்ந்தார். அப்போது அவர் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருப்பார் என நினைத்து பாருங்கள். அதேபோல உங்கள் மனதின் வேதனைகளையும், உள்ளத்தின் போராட்டங்களையும் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் பெருந்துணையாக இருப்பர். நல்லது எது, கெட்டது எது என்பதை சொல்லிக் கொடுப்பர்.


latest tamil news



வெற்றிடம்




இன்று அவர்கள் இல்லாத சூழலில் உங்களின் பொறுப்பு அதிகமாகிஉள்ளது. உங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.உங்களின் நல்லது, கெட்டதிலும், போராட்டங்களிலும், சிரமங்களிலும் நீங்கள் தனித்து விடப்பட்டதாக கருத வேண்டாம். உங்கள் குடும்பத்தில் ஒருவராக நான் இருப்பேன். ஒட்டுமொத்த நாடும் உங்களுடன் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்தக் கடிதத்துடன் பி.எம்.கேர்ஸ் திட்டப் பயன்கள் குறித்த கையேடும் அனுப்பப்பட்டுஉள்ளது.


குழந்தைகளுக்கு கிடைக்கும் பயன்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் இலவச கல்வி, உயர் கல்விக் கடன், 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு, 18 வயது வரை மாதாந்திர உதவித் தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. 23 வயது முடிந்தவுடன், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 1-12ம் வகுப்பு வரை, திறன் பயிற்சி, தொழில்நுட்ப கல்வி ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி மையங்களில் பயில, ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய் உதவித் தொகை; 50 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை ஆகியவை வழங்கப்படும்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-ஜூன்-202215:55:36 IST Report Abuse
Rafi இவர் ஆட்சியை விட்டு போய் விட்டால் யார் அந்த PMcare பொறுப்பாவார்கள் என்று விளக்க முன்வரவேண்டும்.
Rate this:
Cancel
01-ஜூன்-202209:27:02 IST Report Abuse
அப்புசாமி மக்கள் தொகையை எப்பிடி கட்டுப்படுத்தறதா உத்தேசம்? சீனியர் சலுகைகளை கட் பண்ணியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X