பிரசாரத்தில் பின்தங்கும் அதிமுக; முன்னே பாயும் பாஜ: அதிமுகவுக்கு'மாஜி' எச்சரிக்கை

Updated : ஜூன் 01, 2022 | Added : ஜூன் 01, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
சென்னை: திமுக.,விற்கு அடுத்த பெரிய கட்சி, எதிர்க்கட்சி பா.ஜ., என்பதுபோன்ற பிம்பத்தை பா.ஜ.,வினர் சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும், அந்த பிரசாரத்தை முறியடித்து, அதிமுக தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்பதை அதிமுக ஐ.டி.,விங் நிரூபணம் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.அதிமுக உடன் கூட்டணியில் இருக்கும் பா.ஜ., கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து
ADMK, Ponnaiyan, BJP, Opposition Party, IT Wing, அதிமுக, எதிர்க்கட்சி, பாஜக, பாஜ, பொன்னையன், ஐடி விங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திமுக.,விற்கு அடுத்த பெரிய கட்சி, எதிர்க்கட்சி பா.ஜ., என்பதுபோன்ற பிம்பத்தை பா.ஜ.,வினர் சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும், அந்த பிரசாரத்தை முறியடித்து, அதிமுக தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்பதை அதிமுக ஐ.டி.,விங் நிரூபணம் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.

அதிமுக உடன் கூட்டணியில் இருக்கும் பா.ஜ., கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஓரளவு தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது. உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே தனியாக போட்டியிடுவதாகவும், அதிமுக - பா.ஜ., தொடரும் என இரு தரப்பிலும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பா.ஜ., முழு ஆதரவு அளித்தது. இந்த நிலையில் சமீபகாலமாக தமிழகத்தில் அதிமுக.,வை விட பா.ஜ.,வின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், திமுக - அதிமுக என்றிருந்த அரசியல் களம், திமுக - பா.ஜ., என மாறத் துவங்கி உள்ளது. இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில், அதிமுக அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பேசுகையில், ‛அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரசாரத்தை பா.ஜ., மறைமுகமாக செய்கிறது. நாம் எச்சரிக்கையோடு, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தோழமை கட்சி என்பதால், நாம் இதை செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் இதை பரப்ப வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.


latest tamil news


இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது பேச்சு குறித்து பொன்னையன் இன்று (ஜூன் 1) விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: திமுக.,விற்கு அடுத்த பெரிய கட்சி, எதிர்க்கட்சி பா.ஜ., என்பதுபோன்ற பிம்பத்தை பா.ஜ.,வினர் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அந்த பிரசாரத்தை முறியடித்து, அதிமுக தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்பதை அதிமுக ஐ.டி.,விங் நிரூபணம் செய்ய வேண்டும்.

காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக மக்களின் நலனுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நீட் பிரச்னை, ஹிந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்னைகளில் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆதரவான நிலைபாட்டை பா.ஜ., எடுக்க வேண்டும். தமிழகத்தின் நலனுக்காக கொள்கையை மாற்றிக்கொண்டால் தான் இங்கு பா.ஜ.,வால் வளர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூன்-202206:52:43 IST Report Abuse
K.R PREM KUMAR Bangalore கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தேசிய கொள்கைகளுக்கு எதிராக ஒரு நிலைபாட்டை எடுத்துள்ள தி.மு.க.வை ஆதரிக்கும் அதே நிலைபாடுடன் செயல்படும் அ.தி.மு.கவை எதிர்க்க பா.ஜ.க. தயங்க கூடாது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பிரதமர் தலைமையை அ.தி.மு.க ஏற்றுகொண்டு செயல்படும் முடிவால் தான், விசித்திரமான இரட்டை தலைமையில் கட்சி இயங்கும் நிலையிலும், தமிழகத்தில் கட்சி உள்ளது என்பதை பொன்னையன் போன்றோர் மறந்துவிட கூடாது. பதவிகளுக்காக, தன் தலைவரை கொன்றவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்பும் தி.மு.க.வை ஆதரித்து வரும் தமிழக காங்கிரஸ் கட்சியை போல், அதே நிலைபாட்டை கொண்ட அ.தி.மு.கவை ஆதரித்து அவர்கள் பின்னால் தான் பா.ஜ.க.இருக்க வேண்டும் என பொன்னையன் எண்ணினால், தமிழகத்தில் பா.ஜக. தனித்து அரசியலும் செய்ய முடியாது. 2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சியை வருவதை தடுக்கவும் முடியாது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-ஜூன்-202220:12:01 IST Report Abuse
Girija கூந்தல் இருக்கிறவ அள்ளி முடிந்தால் உங்களுக்கு ஏன் பொறாமை ?
Rate this:
Cancel
01-ஜூன்-202219:46:02 IST Report Abuse
SUBBU,MADURAI ////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X