வராது... வரவே வராது...பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு: மம்தா திட்டவட்டம்

Updated : ஜூன் 01, 2022 | Added : ஜூன் 01, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
கோல்கட்டா: 2024 ல் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.கோல்கட்டாவில் அவர் கூறியதாவது: நான் ஒரு விஷயத்தை தெளிவாக கூற விரும்புகிறேன். 2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு பா.ஜ., வீட்டிற்கு சென்றே ஆக வேண்டும். பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. 2024ல் பா.ஜ.,வின் வெறுப்பு வன்முறை அரசியல் வரவேற்கப்படாது. மக்களுக்காக போராடும்
B.J.P,BJP,Bharatiya Janata Party,Mamata Banerjee,பா.ஜ,மம்தா,மம்தா பானர்ஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: 2024 ல் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கோல்கட்டாவில் அவர் கூறியதாவது: நான் ஒரு விஷயத்தை தெளிவாக கூற விரும்புகிறேன். 2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு பா.ஜ., வீட்டிற்கு சென்றே ஆக வேண்டும். பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. 2024ல் பா.ஜ.,வின் வெறுப்பு வன்முறை அரசியல் வரவேற்கப்படாது. மக்களுக்காக போராடும் சக்தியை புருலியா மண்ணும், மே.வங்க மண்ணும். எனக்கு கொடுத்துள்ளது. மக்கள் நலனை பாதுகாப்பதில் எனக்கு யார் மீதும் பயமில்லை. மக்களுக்காக என் முழு சக்தியையும் ஒருங்கிணைந்து போராடுவேன். போலியான வாக்குறுதிகளை கொடுத்து பா.ஜ., ஆட்சிக்கு வந்தது.


latest tamil news



பா.ஜ., அரசால் சாமான்ய மக்களின் வாழ்க்கை சிதைந்துள்ளது. மக்கள் விரோத திட்டங்கள் ஏழை மக்களை வாட்டுகிறது. மத்திய அரசு கலப்படம் நிறைந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற மிகப்பெரிய ஊழல் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ., அரசு சீர்குலைத்துள்ளது.


latest tamil news


சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவுகள் வேண்டாதவர்கள் மீது ஏவப்படும் அமைப்புகளாக உள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வதில் தீவிரமாக உள்ளனர். மோடி அரசு, டில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்துள்ளது. மஹாராஷ்டிரா அமைச்சரை கைது செய்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டிற்கு விசாரணை அமைப்புகளை அனுப்பி வைத்தது. மே.வங்கத்தில் ஒருவரை நிலக்கரி திருடன் எனக்கூறுகிறீர்கள். பா.ஜ., அமைச்சர்கள் யாரும் இதில் கைது செய்யப்படாதது ஏன்? பாஜ., அவர்களையும் கைது செய்திருக்க வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - KARAIKUDI,இந்தியா
01-ஜூன்-202219:57:03 IST Report Abuse
Nesan 2024 இல் மீண்டும் ஆட்சியை பிடிப்போம். சாதனை படைப்போம். பாரத் மாதா கி ஜெய். ஜெய் மோடி ஜி
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-ஜூன்-202216:35:03 IST Report Abuse
sankaseshan திதியின் சாபம் நிறைவேறாது
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
01-ஜூன்-202214:31:01 IST Report Abuse
செல்வம் புலம்பு நல்லா புலம்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X