வரலாறு காணாத விலை உயர்வு: இலங்கையாக மாறும் பாகிஸ்தான்

Updated : ஜூன் 02, 2022 | Added : ஜூன் 02, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விலை வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் ரூபாய் மதிப்பு கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத வகையில் 7 சதவீதம் குறைந்தது. இது மேலும் கடும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் மற்றும்
Pakisthan,பாகிஸ்தான்,சமையல் எண்ணெய், நெய், விலை உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விலை வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் ரூபாய் மதிப்பு கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத வகையில் 7 சதவீதம் குறைந்தது. இது மேலும் கடும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து கடனுதவி கேட்டு, பாக்., கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.


latest tamil news



இந்நிலையில், சமையல் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை வரலாறு காணாத வகையில் அந்நாட்டு அரசு நேற்று முதல் உயர்த்தியது. ஒரு லிட்டர் நெய்யின் விலை 208 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது லிட்டர் 605 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெயின் விலை 213 ரூபாய் உயர்த்தப்பட்டு, 555 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நிலைமை இப்படியே போனால், இலங்கையை போல் பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan - Chennai ,இந்தியா
03-ஜூன்-202212:29:40 IST Report Abuse
Srinivasan மற்றவர்களை அழிக்க நினைக்கும் அனைவர்க்கும் இது பாடம் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்து கொடுத்து நாட்டை கெடுத்து விட்டார்கள்
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூன்-202213:33:59 IST Report Abuse
முக்கண் மைந்தன் பாக்கிஸ்தான பாத்து இளிச்சிச்சாம் புதூ இந்தியா
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூன்-202213:18:46 IST Report Abuse
முக்கண் மைந்தன் புதூ இந்தியாக்கு ரெண்ண்டு பங்காளிங்க
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202220:42:53 IST Report Abuse
Fastrackஇந்த புண்ணியவான் பிள்ளைகுட்டிகள் எந்த லட்சணத்தில் படிக்கிறார்கள் ..இல்ல டாஸ்மாக் வாசல்ல கவிச்ச விக்கிராங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X