பா.ஜ.,வில் இளைஞர்கள் இணையக்கூடாது! பா.ம.க.,வினருக்கு ராமதாஸ் கட்டளை

Updated : ஜூன் 02, 2022 | Added : ஜூன் 02, 2022 | கருத்துகள் (102) | |
Advertisement
தமிழக வடக்கு, மேற்கு மாவட்ட இளைஞர்கள், பா.ஜ.,வில் இணைவதை தடுக்க வேண்டும் என, பா.ம.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டளையிட்டு உள்ளார்.கடந்த 2004-ல் தி.மு.க., -- காங்., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி செல்வாக்குடன் வலம் வந்தார்.அடுத்து, 2009, 2014, 2019 லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம்பெற்ற
BJP, Pattali Makkal Katchi, Ramadoss, PMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தமிழக வடக்கு, மேற்கு மாவட்ட இளைஞர்கள், பா.ஜ.,வில் இணைவதை தடுக்க வேண்டும் என, பா.ம.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டளையிட்டு உள்ளார்.கடந்த 2004-ல் தி.மு.க., -- காங்., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி செல்வாக்குடன் வலம் வந்தார்.அடுத்து, 2009, 2014, 2019 லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம்பெற்ற கூட்டணி தோல்வி அடைந்ததால், அக்கட்சியால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற முடியவில்லை. இதனால், 2024 லோக்சபா தேர்தலில் குறைந்தது ஐந்து எம்.பி.,க்களை பெற்று, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று விட வேண்டும் என்ற இலக்குடன், பா.ம.க., தன் பணிகளை துவங்கியுள்ளது.இதற்காக, 'பா.ம.க., 2.0' என்ற செயல்திட்டத்தை முன்வைத்து, கட்சி தலைவராக அன்புமணி பொறுப்பேற்றுள்ளார். வரும், 2024 தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்தும் வகையில், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், ராமதாஸ் மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.latest tamil news


கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க.,வை பொறுத்தவரை, களத்தில் பா.ஜ.,தான் எதிரி. பா.ம.க.,வில் இருந்தோ, வன்னியர் சங்கத்தில் இருந்தோ, வேறு கட்சிகளுக்கு சென்றால்கூட, ஒருநாள் பா.ம.க.,வை நோக்கி வருவர் என நம்பலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., என்பது ஒருவழிப்பாதை; சென்றால் இளைஞர்கள் திரும்ப மாட்டார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகளும் இளைஞர்களை ஈர்த்து வருகிறது.வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும் உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வில் சேருவதை தடுக்க, பா.ம.க., நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இளைஞர்களை ஈர்க்கும் செயல் திட்டங்களை முன்வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கண்டிப்புடன் ராமதாஸ் பேசியதாக, பா.ம.க.,வினர் கூறுகின்றனர்.இந்நிலையில், பா.ம.க., தலைவராகியுள்ள அன்புமணி, ''தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, போலீஸ் தொப்பி அணிந்த மனநிலையிலேயே இன்னும் இருக்கிறார்,'' என, பா.ஜ.,வை விமர்சிக்க துவங்கியுள்ளார். அண்ணாமலையின் செயல்பாடுகளால், அ.தி.மு.க., அதிருப்தியில் இருக்கும் நிலையில், பா.ம.க.,வுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.


பா.ம.க., கலக்கம் ஏன்?

பா.ம.க., துணைப் பொதுச் செயலராக இருந்த அகோரம், இப்போது பா.ஜ.,வில் உள்ளார். சமீபத்தில் திருவாரூரில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பெரும் கூட்டம் திரண்டதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஏற்கனவே, பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். தற்போது வன்னியர் சங்க தலைவராக இருக்கும் அருள்மொழியின் சகோதரர் இளங்கோவன், 2004-ல் பா.ஜ.,வில் இணைந்த தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார்.கட்சியின் நிர்வாகிகள் பலரும் பா.ஜ.,வில் அடுத்தடுத்து இணைந்து வருவது, பா.ம.க.,விற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
07-ஜூன்-202210:58:55 IST Report Abuse
C.SRIRAM இரு திராவிட கட்சிகளின் மீதும் மாரி மாரி சவாரி செய்து குடும்பத்தை மட்டும் முன்னிலைப்படுத்திய கட்சி நிறுவனரின் விரக்தி வெளிப்பாடு . இவற்றுட் கட்சியில் சேர்ந்த இளைஞர்களுக்கு இவர் என்ன செய்திருக்கிறார் ?
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
07-ஜூன்-202210:05:05 IST Report Abuse
TamilArasan அண்ணாமலை தமிழக அரசியலில் உள்ள கொடிய குடும்ப அரசியலை அளிக்கவந்த ரட்சகர்....
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
07-ஜூன்-202205:23:45 IST Report Abuse
Rajasekaran தமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது என்று அழுத்தம் திருத்தகமாக பேசியவர்கள் எல்லாரும், அண்ணாமலையின் வரவுக்கு பிறகு ஆடிப்போயிருக்கிறதை காணும் பொழுது, வாரிசு அரசியலுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வரப்போகிறது என்பதை நினைத்து தமிழக மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பது கண்கூடு. ராமதாஸ் யார், இளைஞர்கள் எந்த கட்சியில் சேர வேண்டும் அல்லது சேரக்கூடாது என்று கட்டளை இடுவதற்கு. பா.ஜ.க. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினற்காகவே உழைக்கும் கட்சி அல்லவே இந்த கட்சிக்கு ஒரு நிரந்தர கொள்கை எதாவது இருக்கிறதா? சந்தர்ப்பத்திற்கு தகுந்தமாதிரி மாறி மாறி கூட்டணிகளுடன் ஒட்டிக்கொண்டு, எதோ சில பகுதிகளை ஜாதியின் அடிப்படையில் கைப்பற்றும் இவர்களுக்கு தமிழக மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு உரிய புரிதல் எதுவும் உள்ளதா ? இவர் கட்டளையை இளைஞர்கள் ஒன்று திரண்டு நிராகரிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X