ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளரை காஷ்மீரில் கொன்ற பயங்கரவாதிகள்

Updated : ஜூன் 02, 2022 | Added : ஜூன் 02, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில், ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில், ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட 2வது சம்பவம் இதுவாகும்.குல்காம் மாவட்டத்தில் உள்ள எலகுவாகி டெகாட்டி வங்கியில் மேலாளராக இருந்த விஜய்குமாரை பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டான். அதில், படுகாயமடைந்த விஜய்குமார்
ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளரை காஷ்மீரில் கொன்ற பயங்கரவாதிகள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில், ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில், ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட 2வது சம்பவம் இதுவாகும்.



குல்காம் மாவட்டத்தில் உள்ள எலகுவாகி டெகாட்டி வங்கியில் மேலாளராக இருந்த விஜய்குமாரை பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டான். அதில், படுகாயமடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். ராஜஸ்தானின் ஹனுமன்கார்க் மாவட்டத்தை சேர்ந்த விஜய்குமார், சமீபத்தில் தான் அங்கு பணி நியமனம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news




தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை சுற்றி வளைத்த பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.



latest tamil news


குல்கம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த ரஜ்னி பாலா என்ற காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


latest tamil news





விஜய்குமார் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Muthuraj - Sivakasi,இந்தியா
02-ஜூன்-202220:43:42 IST Report Abuse
K.Muthuraj இதிலே இந்த மாதிரியான சம்பவங்களுக்கு இவர்கள் ஒரு நூதனமான பதில் ரெடி செய்திருப்பார்கள். தங்கள் நபர் மேல் தாக்குதல் என்றால் (அவன் பக்கத்துக்கு வீட்டுக்காரன் தாக்கியிருப்பான்) இஸ்ரேல் சதி - மோடி சதி என்பார்கள். இதையே தங்கள் நபர் மற்றவர்கள் மேல் செய்திருந்தால் RAFI சொல்வதுபோல் நூதனமான பதில் வைத்திருப்பார்கள். அல்லது என்றோ எங்கோ நடந்த ஒன்றுக்கு பழி வாங்கியதாக கூறுவார்கள். இதையே தங்கள் மக்களிடமும் பரப்புவார்கள். இதனால் தங்கள் மக்கள் செய்த கொலைகள் பற்றிய உறுத்தல் மற்றும் குற்ற உணர்ச்சி வராது. பழிக்கு பழி வாங்கியதாக திருப்திப்படுவார்கள்.
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
02-ஜூன்-202220:41:40 IST Report Abuse
Narayanan Muthu ////
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-ஜூன்-202220:32:48 IST Report Abuse
அசோக்ராஜ் இந்த வங்கி எஸ்பிஐ யின் துணை வங்கி. ஸோல் ஓனர் எஸ்பிஐ தான். பாதுகாப்பு டர்ர்ர்ர் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X