அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை: பா.ஜ., பதிலடி

Updated : ஜூன் 02, 2022 | Added : ஜூன் 02, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என தமிழக பா.ஜ., துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறுகையில், 'அ.தி.மு.க., பின்னுக்கு தள்ளப்படும்' என்ற பிரசாரத்தை, பா.ஜ., மறைமுகமாக செய்கிறது. நாம் எச்சரிக்கையோடு, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை,
அதிமுக, துரைசாமி, பொன்னையன், பாஜ,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என தமிழக பா.ஜ., துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறுகையில், 'அ.தி.மு.க., பின்னுக்கு தள்ளப்படும்' என்ற பிரசாரத்தை, பா.ஜ., மறைமுகமாக செய்கிறது. நாம் எச்சரிக்கையோடு, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை போன்றவற்றில், தமிழக பா.ஜ., குரல் எழுப்புவதில்லை.


latest tamil news


இதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். தோழமை கட்சி என்பதால், நாம் இதைச் செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் இதை பரப்ப வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக்கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ., துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறியதாவது: சட்டசபையில் பா.ஜ.,விற்கு 4 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பஞ்சமி நிலம், மின்சாரத்துறை மற்றும் கல்வித்துறையில் நடக்கும் ஊழல் குறித்து அவர்கள் தினமும் பேசி வருகின்றனர். அண்ணாமலை மக்கள் மன்றத்தில் பேசி வருகின்றார்.

தமிழகத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. சட்டசபையில் 67 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள அதிமுக, வலுவான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. ஆனால், 4 எம்.எல்.ஏ.,க்கள் வைத்து கொண்டு பா.ஜ., சிறப்பாக செயல்படுவதாக மக்கள் ஏற்று கொண்டனர்.ஆளுங்கட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் அதிமுக தவறிவிட்டது.

அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையனுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் அவர் பா.ஜ.,வை இப்படி பேசியிருக்கிறார். அவர் தேவையில்லாமல் கருத்துகளை தெரிவித்திருக்கிறார். கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல், பொன்னையன் பா.ஜ., குறித்து பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொன்னையனிடம் அ.தி.மு.க உரிய விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு துரைசாமி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogeshananda - Erode,இந்தியா
03-ஜூன்-202204:13:28 IST Report Abuse
Yogeshananda இவனுகளும் களவானிகள் தானே...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-ஜூன்-202222:18:49 IST Report Abuse
sankaseshan சமந்தா திருடர்கள் கூட்டணி வைத்து தானே ஜெயித்தார்கள் கடந்த காலங்களில் தனியாக போட்டியிட்டு ஜெயித்தார்களா 1967 லில் ஆரம்பமே கூட்டணிதான்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-ஜூன்-202220:49:32 IST Report Abuse
sankaranarayanan இவரை என்றோ அம்மா அவர்கள் கிழட்டிவிட்டார்கள் மக்களுக்கே நன்றாக தெரியும். இன்னும் ஏன் இவர் இப்படி புலம்புகிறார்? பொன்னையன் கட்சியை புன்னாக்கிவிட்டவர். இன்னுமா இவரை கட்சியில் நீடிக்க அவகாசம் கொடுக்க வேண்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X