கார்த்தி சிதம்பரம் முன் ஜாமின் மனு.தள்ளுபடி!

Updated : ஜூன் 05, 2022 | Added : ஜூன் 03, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: 'விசா' முறைகேடு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. தமிழகத்தைச் சேர்ந்தவரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம், 2011ல் மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு,
 கார்த்தி சிதம்பரம் முன் ஜாமின் , தள்ளுபடி

புதுடில்லி: 'விசா' முறைகேடு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம், 2011ல் மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு, சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி, தன் தந்தையின் உதவியுடன் இந்த விசாவை பெற்றுத் தந்ததாகவும், இதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ., தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து கார்த்திக்கு சொந்தமாக டில்லி மற்றும் சென்னையில் உள்ள இடங்கள் மற்றும் வீடுகளில், அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.



இதற்கிடையே, சி.பி.ஐ., விசாரணை அடிப்படையில், விசா விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும், கார்த்தி, பாஸ்கரராமன் ஆகியோர் மீதும், விகாஸ் மகாரியா என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் தங்களை கைது செய்யாமல் இருப்பதற்காக, மூவரும் டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 30ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''பல ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாக கூறி, இப்போது விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கில் கார்த்திக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. எனவே, அவருக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும்,'' என்றார்.



அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு கூறுகையில், ''இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். அதற்குள், தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம், மனுதாரருக்கு ஏன் வந்தது என தெரியவில்லை,'' என்றார். இதையடுத்து, கார்த்தி உள்ளிட்ட மூவரது முன் ஜாமின் மனுவையும், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், கார்த்தி கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூன்-202217:21:56 IST Report Abuse
ram ஊழல் பேர்வழிகளை தூக்கி உள்ளே போடுங்க... இவ்வளவு நாள் நடமாட விட்டதே தப்பு.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜூன்-202216:56:37 IST Report Abuse
J.V. Iyer ப.சி. குடும்பத்திற்கு தூக்கிப்பிடிக்கும் மாக்கள் காணாமல் போய்விட்டார்களா?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-ஜூன்-202216:54:07 IST Report Abuse
Girija தமிழ்நாட்டிலேயே இவ்வளவு எதிரிகளா இவர்களுக்கு ? அய்யகோ வைக்கோ இதை பார்த்தாயா? அதை கேட்டாயா? கூட்டணி கட்சி தலைவர்களை இந்த பாசிச அரசு ....? சீன பட்டாசு இறக்குமதி செய்தால் தப்பு , சீனர்களுக்கு விசா கொடுத்தாலுமா தப்பு ? தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்து , நிலத்தடி நீர் மட்டம் நிலத்திற்கு மேல் நான்கு அடி உயர்ந்து, தென்னையும் பனை யும் உயர்ந்து நிற்க , விவசாயம் செழித்து மக்கள் மிக மிக ஆரோக்கியமாக இருக்கின்றனர் ஸ்டெர்லிட் ஆலையை இழுத்து மூடியவுடன், ஆனால் பட்டினி வேலைவாய்ப்பின்றி , செங்கொடிகளின் பினாமிகள் கொழுத்து குஷியாக இருக்கின்றனர் தாமிர வியாபாரத்தில். அய்யகோ அய்யகோ , தேர்தல் நிதி வசூல் எத்தனை கோடி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X