அதிமுக.,விற்கு கூடுவது கொள்கை கூட்டம்: பா.ஜ.,விற்கு கூடுவது காக்கா கூட்டம்: செல்லூர் ராஜூ கிண்டல்

Updated : ஜூன் 05, 2022 | Added : ஜூன் 04, 2022 | கருத்துகள் (94) | |
Advertisement
மதுரை: அ.தி.மு.க.,விற்கு கூடுவது கொள்கை கூட்டம். பா.ஜ.,விற்கு கூடுவது காக்கா கூட்டம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.மதுரையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக எப்போதும் செயல்படுகிறது. எங்கள் பார்வையில் நாங்கள் தான் எதிர்க்கட்சி. அ.தி.மு.க.,விற்கு ஆயிரகணக்கான கிளைகள் உள்ளது. அந்த கட்சி ஒரு கூட்டம் போட்டால், ஆயிரம் பேர்,
bjp, admk, sellurraju, sellurkraju, பாஜ, அதிமுக, செல்லூர் ராஜூ,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: அ.தி.மு.க.,விற்கு கூடுவது கொள்கை கூட்டம். பா.ஜ.,விற்கு கூடுவது காக்கா கூட்டம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக எப்போதும் செயல்படுகிறது. எங்கள் பார்வையில் நாங்கள் தான் எதிர்க்கட்சி. அ.தி.மு.க.,விற்கு ஆயிரகணக்கான கிளைகள் உள்ளது. அந்த கட்சி ஒரு கூட்டம் போட்டால், ஆயிரம் பேர், இரண்டாயிரம் பேர், 3 ஆயிரம் பேர் திரண்டது பெரிய விஷயம் அல்ல. எல்லாருக்கும் வரும். இது காக்கா கூட்டம் அல்ல. நாங்கள் காக்கா கூட்டம் அல்ல. கொள்கை கூட்டம். கூட்டத்தை வைத்து முடிவு செய்யக்கூடாது. இலையில் சோறு போட்டால் வரத்தான் செய்யும். பிறகு பறந்துவிடும்.


latest tamil news



நாகூர் தர்காவில் காலையில் அதிகளவு புறாக்கள் இருக்கும். மாலையில் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். அதேபோன்ற புறாக்கள் தான் இங்கு உள்ளது. கூட்டத்தை வைத்து எதையும் கூற முடியாது. முருகன் வந்தார். வேல்பிடித்தார். பதவி கிடைத்தது. தமிழிசை வந்தார். சிறப்பாக பணியாற்றினார். பதவி கிடைத்தது. அதேபோன்று நமக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அவர்செய்திருக்கலாம். அதிமுகவினர் மீது துரும்பை வீசினால், தூணை வீசுவார்கள். யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தே போட்டி என சொல்ல அ.தி.மு.க., தயார். மற்ற கட்சியினர் தயாரா? இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூன்-202218:44:22 IST Report Abuse
kulandai kannan கொள்கை என்பதே கிஞ்சித்தும் இல்லாத கட்சி அதிமுக. கொள்ளை அடிப்பது, தனிமனித வழிபாடு, பிதற்றுவது போன்றவையெல்லாம் கொள்கையென்று நினைத்து விட்டார் ராஜு.
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
05-ஜூன்-202213:22:20 IST Report Abuse
C.SRIRAM உங்க கொள்கை என்ன? கிடைத்த இடத்தில் கிடைத்த எல்லாவற்றையும் ஆட்டை போடுவது ?.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
05-ஜூன்-202204:24:58 IST Report Abuse
அன்பு தெர்மோகோல் விஞ்ஞானி வீட்டிற்கு ரைடு அனுப்பினால், காக்கா, புறா ஆகிவிடும்.
Rate this:
Suri - Chennai,இந்தியா
05-ஜூன்-202207:33:00 IST Report Abuse
Suriஉங்களால முடிஞ்சது அவ்வ்ளோ தான். மக்கள் செல்வாக்கு வந்துடுமா? பெயர் இன்னும் தான் குப்பைக்கு போகும். பழிவாங்கும் படலத்தை ஏன் முன்னாடி செய்யல? இது தான் ஊழலுக்கு எதிரான கட்சி என்று பெருமை பேசுவதன் அர்த்தமா.. என்று ஆயிரம் கேள்விகள் மக்கள் மனதில் எழும்.. ஏற்கனவே பீசப்பிக்கு இருக்கும் மரியாதையை எல்லோருக்கும் தெரியும்...ஹி ஹி ஹ ஏஹி ஹி ஹ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X