மக்களுக்கான ஆட்சி: பிரதமர் மோடி பெருமிதம்| Dinamalar

மக்களுக்கான ஆட்சி: பிரதமர் மோடி பெருமிதம்

Updated : ஜூன் 05, 2022 | Added : ஜூன் 05, 2022 | கருத்துகள் (14) | |
புதுடில்லி-'கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழை, எளிய மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என, அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் மக்களுக்கான ஆட்சி நடந்துள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசு சார்பிலும், பா.ஜ., சார்பிலும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-'கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழை, எளிய மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என, அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் மக்களுக்கான ஆட்சி நடந்துள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசு சார்பிலும், பா.ஜ., சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தன் இணையதளத்தில், பல்வேறு துறை நிபுணர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட கட்டுரைகளை, பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்தக் கட்டுரைகளை இணைத்து, சமூக வலைதளத்தில் அவர் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மோடி கூறியுள்ளதாவது:கடந்த எட்டு ஆண்டுகளில் பல சாதனைகள், செயல் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல பலன்களை அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.மக்களுக்கான இந்த ஆட்சியில் அனைவருடன் இணைந்து, அனைவரது வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையை நிறைவேற்றும், அனைவரின் முயற்சியுடன் இணைந்து செயல்படுவது என்ற கோஷத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.


latest tamil news


இந்தியா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது துல்லிய தாக்குதல், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், ராணுவ சாதனங்கள் ஏற்றுமதி 6 மடங்கு உயர்வு, வெளிநாடுகளில் இருந்து, 1.83 கோடி இந்தியர் மீட்பு என, பல சாதனைகளை குறிப்பிடலாம்.இந்த அரசானது, ஒவ்வொரு இந்தியரின் நலனுக்கானது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X