திண்டுக்கல்:பிளஸ் 2வுக்கு பின் கல்வி மற்றும் வாழ்க்கையில் ஜெயிக்க உயர்கல்வியில் என்ன படிப்பு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்பதற்கான பல அரிய ஆலோசனைகளை வாரி வழங்கும் தினமலர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே., மஹாலில் இன்றும் (ஜூன் 5) நாளையும் (ஜூன் 6) நடக்கிறது.
இதுதொடர்பாக நடக்கும் சிறப்பு கருத்தரங்குகளில் புதிய படிப்புகள், அரசு வேலை வாய்ப்புகள், நீட் பிரத்யேக விளக்கம், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம் உட்பட ஏராளமான பிரிவுகள் குறித்து துறைசார் நிபுணர்கள் பல்வேறு பயனுள்ள ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
வேலை வாய்ப்பை எளிதாக்கும் 'டாப்' துறைகள், படிக்கும் போதே மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் கல்வியாளர்கள் விளக்கமளிக்கின்றனர். அனுமதி இலவசம். இன்று காலை 10:00 மணிக்கு கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இயக்குனர் டாக்டர். மரகதம் குத்துவிளக்கேற்றி கண்காட்சி, கருத்தரங்கை துவக்கி வைக்கிறார்.
ஒரே இடத்தில் விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் என விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான நடைமுறை, கட்டணம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை பெறலாம்.
இதன் மூலம் கல்லுாரிகள், பாடங்களை தேர்வு செய்ய மாணவர்கள், பெற்றோர் அலைவது தவிர்க்கப்படும். கல்வி நிறுவன ஸ்டால்கள் காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை இடைவேளையின்றி திறந்திருக்கும். காலை 10:00 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் கருத்தரங்கு நடக்கிறது.உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற www.kalvimalar.com
என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற 'வாட்ஸ் ஆப்' எண் வழியாகவும் பெயர் மற்றும் மாவட்ட விவரங்களுடன் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய பவர்டு பை பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் செயல்படுகிறது.கருத்தரங்கில் வழி காட்டுபவர்கள்
அனிமேஷன், ஊடக படிப்புகள்பேராசிரியர் பாபு ஷாஜன் கெவின்இன்ஜினியரிங்பேராசிரியர் கருப்புசாமிவேலைவாய்ப்பு, உயர்கல்விகல்விஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்திதொழிலக பாதுகாப்புபேராசிரியர் விவேக் ராம்குமார்இணை மருத்துவ அறிவியல்டாக்டர் காயத்ரிஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ்பேராசிரியர் திலிப்குமார்கல்விக் கடன்கள்வங்கியாளர் விருத்தாச்சலம்வணிகவியல்பேராசிரியர் சுப்பிரமணியன்நீட், ஜெ.இ.இ., ஸ்காலர்ஷிப்கல்வி ஆலோசகர் அஸ்வின்மரைன் கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட்பேராசிரியர் சுரேஷ்குமார்படிப்புகளை தேர்வு செய்வது எப்படிகல்வியாளர் ரமேஷ் பிரபா
காலை, மாலையில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியின்போது மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போரில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு லேப்டாப், 'டேப்லெட்', 'வாட்ச்' பரிசாக வழங்கப்படும்.இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. மாணவர்களே, பெற்றோர்களே வாருங்கள். தெளிவான ஆலோசனை கேளுங்கள்.