மதுரை:''மதமாற்றமானது தேசிய அபாயம் மட்டுமல்ல; உலக அபாயம். அது அனைத்து நாடுகளின் பண்பாடு, அமைதி, ஒற்றுமையை சிதைக்கும் அபாயம் உள்ளது,' என மதுரையில் துவங்கிய துறவியர் மாநாட்டில் கோவை திருப்பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசினார்.
மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் கமலாத்மானந்தா சுவாமி பேசியதாவது:இந்தியாவை புண்ணிய பூமி என சுவாமி விவேகானந்தர் அழைத்தார். அதற்கு தகுதியுள்ள ஒரே நாடு இந்தியா. இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என புண்ணிய நதிகள், காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. இதுபோல் உலகில் வேறு எங்கும் இல்லை. இங்குள்ளதைப் போல் மகான்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை.ஹிந்து சனாதன மதம். அது இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் முகமதியர்கள், வெள்ளையர்கள் அடிமைப்படுத்தினர். தற்போது எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே பரிகாரம் ஹிந்துக்களிடையே ஒற்றுமை தேவை என்பதே. ஆன்மிகம் என்பது தொடர் ஓட்டம். அதில் நம் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றார்.
மதமாற்றம்
கோயில்களுக்கு தனி வாரியம்
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில், மடங்களை தனி வாரியத்தின் கீழ் கொண்டுவர 50 ஆண்டுகளாக போராடுகிறோம். கோயில்களின் மீது அரசின் தலையீடு கூடாது. வாரியம்தான் அதற்கு தீர்வு.கோயில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவு. சிறுபான்மை மதத்தினருக்கு கிடைக்கும் வருவாய் அவர்களின் மதம் மற்றும் சமுதாய நலனிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் ஹிந்து மதத்தில் அவ்வாறு ஒரு காசைக்கூட பயன்படுத்துவதில்லை.அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியாவில் சைவ சமயங்கள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. அவை படிப் படியாக குன்றிவிட்டன. மதமாற்றமானது தேசிய அபாயம் மட்டுமல்ல; உலக அபாயம். அது அனைத்து நாடுகளின் பண்பாடு, அமைதி, ஒற்றுமையை சிதைக்கும் அபாயம் உள்ளது. இதை எப்படி தடுப்பது, இதில் நம் பங்களிப்பு என்ன என கேள்வி எழுகிறது, என்றார்.
மதுரை சின்மயா மிஷன் சிவயோகானந்தா சுவாமி, திருவேடகம் விவேகானந்த ஆசிரமம் பரமானந்த சுவாமி, தேனி வேதபுரி சித்பவாநந்த ஆசிரமம் தலைவர் சமானந்த சுவாமி, கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயம் சீரவை ஆதினம் ராமநந்த குமரகுருபர சுவாமி, வி.எச்.பி., தென்பாரத அமைப்பாளர் நாகராஜன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ராமன், சேதுராமன், பி.ஆர்.ஓ., வேணு கோபால் பங்கேற்றனர்.