தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.,வினர் சிலர், ரகசியமாக பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக தெரிகிறது.அண்ணாமலையின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு நேற்று, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட, பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து
உள்ளனர்.
பா.ஜ.வினர், கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.,வினர் சிலரும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள்பலரும் ரகசியமாக, அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.பா.ஜ., அரசு, எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ஒட்டி, மாவட்டந்தோறும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்களில் அண்ணாமலை பேசி வருகிறார். ஜூன் 1-ம் தேதி, பழநியில் நடந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 'தி.மு.க., அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடப் போவதாக நான் அறிவித்ததும், இதுவரை நான்கு அமைச்சர்கள், எனக்கு துாது விட்டு உள்ளனர்.
![]()
|
'பெயருக்கு தான் நாங்கள் அமைச்சர்கள். எல்லா முடிவுகளையும் குடும்பம் தான் எடுக்கிறது என்கின்றனர்' என கூறி, தி.மு.க.,வுக்குள் புது குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்தச் சூழலில், தி.மு.க., அமைச்சர்களும், அதிகாரிகளும், அண்ணா மலைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.