ஊட்டச்சத்து பெட்ட டெண்டரில் கைமாறிய லஞ்சம் ரூ.100 கோடி! அண்ணாமலை குற்றச்சாட்டு

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 05, 2022 | கருத்துகள் (71) | |
Advertisement
சென்னை:''கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதலுக்காக, தமிழக அரசு விடுத்த, 450 கோடி ரூபாய் டெண்டரில், 100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த டெண்டரில், ஆவின் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்படும். அத்துடன், 'ஜி ஸ்கொயர்' என்ற ரியல்

சென்னை:''கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதலுக்காக, தமிழக அரசு விடுத்த, 450 கோடி ரூபாய் டெண்டரில், 100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த டெண்டரில், ஆவின் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்படும். அத்துடன், 'ஜி ஸ்கொயர்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை முன்னேற்றும் நிறுவனமாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மாறிவிட்டது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார்.latest tamil news'தி.மு.க., அமைச்சர்கள்இருவருக்கு எதிரான ஊழல் புகார்களை விரைவில் அம்பலப்படுத்துவேன்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி வந்தார்.இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஓராண்டில், லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதில், முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது.கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, தமிழக அரசு சார்பில் ஊட்டச்சத்து மாவு, பிளாஸ்டிக் கப், ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்பு சத்து டானிக் உட்பட, எட்டு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.80 சதவீதம்


பெட்டகத்தில் முக்கியமாக இருப்பது ஊட்டச்சத்து மாவு; அதன் விலை மொத்த தொகுப்பில், 80 சதவீதம்.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இந்த திட்டத்தை மேம்படுத்த, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் தலைமையில், தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆலோசனை கூட்டங்கள் இந்தாண்டு மார்ச் 8, 15, 31ம் தேதிகளில் அடுத்தடுத்து நடந்தன.


அப்போது, ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள, 'புரோ பி.எல்.,' என்ற, தனியார் நிறுவன ஊட்டச்சத்து மாவு வேண்டாம்; அதற்குப் பதிலாக, 'ஆவின்' நிறுவனத்திடம் ஊட்டச்சத்து மாவு வாங்கினால், 60 சதவீதம் செலவை குறைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனாலும், அந்த முடிவு ஏற்கப்படவில்லை.


மாநில அரசின் நிர்ப்பந்தத்தால் மறுபடியும் ஏப்ரல் ௮ல் கூடிய, தொழில்நுட்ப ஆலோசனை குழு, பழைய முறைப்படியே ஊட்டச்சத்து பெட்டகங்களை வாங்க முடிவு செய்தது.

அதன்படி, இரு ஆண்டுகளுக்கு, 23.88 லட்சம் ஊட்டச்சத்து பெட்டகங்களை, 450 கோடி ரூபாயில் கொள்முதல் செய்ய முடிவானது.பெட்டகத்தில் உள்ள எல்லா பொருட்களையும், 'அனிதா டெக்ஸ்காட்' என்ற நிறுவனம் மொத்தமாக 'சப்ளை' செய்ய உள்ளது. இதற்கு, தி.மு.க.,வின் ஆடிட்டர் சண்முகராஜ், அண்ணாநகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகனின் மகன் கார்த்திக் இருவருமே காரணம்.77 கோடி ரூபாய் நஷ்டம்


இவர்கள், முதல்வரின் இரண்டாவது செயலர் வாயிலாக, தொழில்நுட்ப ஆலோசனை குழுவை மிரட்டி, அக்குழு முதலில் எடுத்த முடிவை திரும்ப பெற வைத்துள்ளனர். இதனால், அரசுக்கு, 45 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.ஊட்டச்சத்து பெட்டகத்தில் இடம் பெறும், 200 மில்லி இரும்பு சத்து டானிக்கை, அரசின் மருத்துவத் துறையே, 42 ரூபாய்க்கு தான் வாங்குகிறது.

அதே டானிக்கை, அனிதா டெக்ஸ்காட் நிறுவனம், 224 ரூபாய்க்கு சப்ளை செய்ய உள்ளது. கூடுதல் விலையால் அரசுக்கு, 32 கோடி ரூபாய் நஷ்டம். இரு பொருட்களால் மட்டும், 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.


இதற்கான டெண்டரில், 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனம் தான் தேர்வாக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் மிக மோசமான பொருட்களை வழங்கியதும் இந்த நிறுவனம் தான்.

மோசமான பொங்கல் பரிசு பொருட்களால், மக்கள் இறந்து போவர் என்ற பயம் ஏற்பட காரணமாக இருந்த நிறுவனம், தற்போது, கர்ப்பிணிகளுக்கு தரம் குறைவான பொருட்கள் கொடுப்பதை எப்படி ஏற்க முடியும்?எனவே, டெண்டரை உடனே ரத்து செய்து விட்டு, ஆவின் நிறுவனத்திடம் இருந்து ஊட்டச்சத்து மாவு வாங்க வேண்டும்.சி.எம்.டி.ஏ., மீது புகார்


'ஜி ஸ்கொயர்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னேற்ற நிறுவனமாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மாறி இருக்கிறது.ஒரு நிலத்தை வாங்கி மேம்படுத்தி, 'லே அவுட்' போட்டு விற்பனை செய்ய, சி.எம்.டி.ஏ., மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு துறைகளில் அனுமதி பெற, 200 நாட்களாகும்.


ஆனால், ஜி ஸ்கொயர் நிறுவனம், நீலாங்கரை, கோவை உள்ளிட்ட, 15 இடங்களில் செயல்படுத்தியுள்ள, முக்கிய நில மேம்பாட்டு திட்டங்களுக்கு, 20 நாட்களில் அனுமதி தரப்பட்டுள்ளது.


இது, எப்படி சாத்தியமானது என்றால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இணையதளம் வாயிலாக மட்டுமே, சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டது.

இதனால், சி.எம்.டி.ஏ., ஒப்புதலுக்கு, ஜி ஸ்கொயர் விண்ணப்பிக்கும் ஒரு மணி நேரம் மட்டும் தான், 'ஆன்லைன் லிங்க்' கிடைக்கும். மற்றவர்கள் விண்ணப்பிக்கும் போது இணைப்பு கிடைப்பதில்லை.இதனால், சிறிய நிறுவனங்கள், பாரம்பரிய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.பதில் என்ன?


ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்க, எதற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் என்பது குறித்து, அமைச்சர் முத்துசாமி பதில் தர வேண்டும். ஊட்டச்சத்து மாவு கொள்முதல் விவகாரம் மற்றும் கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டிய நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க அனுமதித்தது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெளிவுபடுத்த வேண்டும்.


எந்த துறையில் விசாரித்தாலும், கார்த்திக், ஜி ஸ்கொயர் பாலா மற்றும் முதல்வர் குடும்பத்தினரின் குறுக்கீடு வருகிறது என்று சொல்லப்படுகிறது. 450 கோடி ரூபாய்க்கான ஊட்டச்சத்து பெட்டகம் கொள்முதலில், 100 கோடி ரூபாய் கைமாறியுள்ளது.


இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்க உள்ளோம். லஞ்ச ஒழிப்புத் துறை

விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.தி.மு.க.,

அரசின் ஓராண்டு செயல்பாடு தொடர்பான அனைத்து விஷயங்களையும் தொகுத்து,

கவர்னரிடம் அறிக்கை அளிக்கப்படும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


பேட்டியின் போது, ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதல் டெண்டரில் நடந்துள்ள முறைகேடு; ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு விரைந்து அனுமதி அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை

வெளியிட்டார்.'ஆதாரம் இன்றி பேசுகிறார்!'


சென்னையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதலுக்கான, 'டெண்டர்' இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு தினங்களில் விலைப்புள்ளி திறக்கப்பட உள்ளது. அதற்குள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறுவது என்ன நியாயம்.


எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது; எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதை அண்ணாமலை தெரிவிக்க வேண்டும். தவறு நடந்ததை தெரிவித்தால் சரி செய்ய தயாராக இருக்கிறோம்;

நஷ்டம் ஏற்பட்டுள்ளதை நிரூபித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தாலும், ஆதராத்துடன் சொல்வது அவசியம். அண்ணாமலை ஆதாரமல் இல்லாமல் பேசுகிறார். ஆதாரம் வெளியிடாவிட்டால், 'நான் கூறியது தவறு' என்று அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்.


அனைத்து துறைகளிலும் தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில், முதல்வர்

ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக உள்ளார்.'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனத்திற்கு தான்

டெண்டர் வழங்க போவதாக, யூகத்தின் அடிப்படையில்கூறுவது தவறு.இவ்வாறு அவர்

கூறினார்.
புதிதாக ஆறு நிறுவனங்கள்!


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேலும் கூறியதாவது:'ஜி ஸ்கொயர்' நிறுவனத்தை பற்றி பலரும் பேசுவதால், அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள், புதிதாக ஆறு நிறுவனங்களை துவக்கிஉள்ளனர்.


* முதல் நிறுவனத்தின் பெயர், 'சன் ஷைன் ஹோல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்'. இதில், முதல்வரின் மருமகன் சபரீசன் முதல் இயக்குனராகவும், முதல்வரின் மகள் இரண்டாவது இயக்குனராகவும் உள்ளனர்


* 'லோட்டஸ் டெவலப்பர்ஸ்' என்பது, இரண்டாவது நிறுவனம். இதை, ஹைதராபாதில் பதிவு செய்துள்ளனர். முதல்வரின் மருமகன் சபரீசன் முதல் இயக்குனராகவும், பிரசாந்த் ரெட்டி தடிசன்னா என்பவர், இரண்டாவது இயக்குனராகவும் உள்ளனர்


* மூன்றாவது நிறுவனம், 'லுக்கப் மெர்ச்சன்டஸ் எல்.எல்.பி.,' நிறுவனம். இதன் முதல் இயக்குனர் மோகன் கார்த்திக், இரண்டாவது இயக்குனர் சபரீசன்


* 'மேக்ஸ் ஸ்பேஸ் ரியாலிட்டி எல்.எல்.பி.,' என்பது நான்காவது நிறுவனம். இதில், சபரீசன் முதல் இயக்குனர், கார்த்திக் இரண்டாவது இயக்குனர்


* 'செஷட்ஸ் ஹோல்டிங்' என்பது ஐந்தாவது நிறுவனம். ரியல் எஸ்டேட் துறையில் அனுமதி கேட்டுள்ளது. அதில், சபரீசன் முதல் இயக்குனராகவும், கார்த்திக் இரண்டாவது இயக்குனராகவும், முதல்வரின் மகள் மூன்றாவது இயக்குனராகவும் உள்ளனர்


* ஆறாவது நிறுவனம், 'மன்னுார் ஒயிட்பீல்ட் கிரியேட்டர்' நிறுவனம், அண்ணாநகர் மோகன் கார்த்திக்கின் தாய் கீதா மோகன் முதல் இயக்குனர், ஜி ஸ்கொயர் பாலா மனைவி ஸ்ரீகலா இரண்டாவது இயக்குனர்.


* ஒரு காலத்தில், '2 ஜி' ஊழல் விவகாரம் தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதியது; தற்போது, 'ஜி ஸ்கொயர்' எழுத உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
11-ஜூன்-202221:00:30 IST Report Abuse
Godyes இன்னும் 47 மாதங்கள் உள்ளன. அண்ணாமலை விடாமல் ஊழல்களை தோண்டி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Tamil - Trichy,இந்தியா
09-ஜூன்-202215:39:35 IST Report Abuse
Tamil அண்ணாமலைக்கு தினமும் பேப்பர்ல செய்தி வரவேண்டும். பாவம் அவர் என்ன செய்வார். கம்பெனி கொடுக்கும் வேலையே கட்சிதமாக செய்கிறார். கூடிய விரைவில் கம்பனியில் அவருக்கு உயர பதவி வரும்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
07-ஜூன்-202217:49:58 IST Report Abuse
Godyes இதென்ன சின்ன பசங்க கேள்வி. திருடனத நீ பாத்தியா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X