சசிகலா பா.ஜ.,வில் சேரலாம்: அதிமுக.,வில் ‛ஹவுஸ்புல்' - ஜெயக்குமார்

Updated : ஜூன் 06, 2022 | Added : ஜூன் 06, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: சசிகலாவுக்கு அதிமுக.,வில் ஒருபோதும் இடமில்லை எனவும், அவர் விரும்பினால் பா.ஜ.,வில் சேரலாம் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சசிகலாவை சேர்க்க மாட்டோம் என அதிமுக.,வினரும், அதிமுக.,விற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என சசிகலாவும் அடிக்கடி கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க பா.ஜ., எம்எல்ஏ நயினார்
அதிமுக, ஜெயக்குமார், சசிகலா, பாஜக, ADMK, Jayakumar, Sasikala, BJP

சென்னை: சசிகலாவுக்கு அதிமுக.,வில் ஒருபோதும் இடமில்லை எனவும், அவர் விரும்பினால் பா.ஜ.,வில் சேரலாம் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை சேர்க்க மாட்டோம் என அதிமுக.,வினரும், அதிமுக.,விற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என சசிகலாவும் அடிக்கடி கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க பா.ஜ., எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சமீபத்தில் கூறுகையில், ‛சசிகலாவை அதிமுக சேர்த்துக் கொண்டால் அந்தக் கட்சி இன்னும் வலுவாக இருக்கும். சசிகலா பா.ஜ.,வுக்கு வந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நிச்சயமாக அது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். சசிகலா அதிமுக.,வுக்கு வரவில்லை என்றால் நாங்கள் பா.ஜ.,வுக்கு வரவேற்போம்' எனக் கூறினார்.


latest tamil news





இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை. இதுதான் எங்கள் நிரந்தர நிலைப்பாடு. பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என சிசகலா நினைக்கிறார். சசிகலா விரும்பினால் பா.ஜ.,வில் சேரட்டும். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமமுக.,வில் 4 பேர் மட்டுமே உள்ளனர்; மற்றவர்கள் அதிமுக.,விற்கு வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
07-ஜூன்-202202:32:18 IST Report Abuse
seshadri எனக்கு சசிகலாவை ஏற்று கொள்ள முடியாது ஆனால் இந்த இரண்டு திராவிட கொள்ளை கூட்டத்தை ஒழிக்க யாரை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். சசியால் செல்வாக்கு கூடுமானால் பி ஜெ பி சேர்த்துக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
07-ஜூன்-202201:04:01 IST Report Abuse
John Shiva   U.K ,,,
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
06-ஜூன்-202220:39:13 IST Report Abuse
John Miller ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X