ஆவின் 'ஹெல்த் மிக்ஸ்' வெளியீடு தாமதம்; 'வருவாய்' நோக்கில் செயல்படுவது யார்?

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை : சட்டசபையில் அறிவித்தும், 'ஆவின் ஹெல்த் மிக்ஸ்' வெளியீடு தாமதமாகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் லாபம் பெறும் நோக்கில், வெளியீட்டை ஆவின் நிறுவனம் தள்ளி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'ஆவின் நிறுவனம் வாயிலாக, ஹெல்த் மிக்ஸ், பாஸந்தி, கோல்ட் காபி உள்ளிட்ட, 10 வகையான பொருட்கள் அறிமுகம் செய்யப்படும்' என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,

சென்னை : சட்டசபையில் அறிவித்தும், 'ஆவின் ஹெல்த் மிக்ஸ்' வெளியீடு தாமதமாகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் லாபம் பெறும் நோக்கில், வெளியீட்டை ஆவின் நிறுவனம் தள்ளி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.latest tamil news'ஆவின் நிறுவனம் வாயிலாக, ஹெல்த் மிக்ஸ், பாஸந்தி, கோல்ட் காபி உள்ளிட்ட, 10 வகையான பொருட்கள் அறிமுகம் செய்யப்படும்' என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பு பணிகளில், ஆவின் நிறுவனம் தீவிரம் காட்டி வந்தது.

தமிழக அரசு கர்ப்பிணியருக்காக, ஹெல்த் மிக்ஸ் பவுடர் உட்பட, எட்டு பொருட்கள் உள்ள ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி வருகிறது. இதற்காக தனியாரிடம் கொள்முதல் செய்வதற்கு பதிலாக, ஆவின் தயாரிக்கும் ஹெல்த் மிக்ஸ் வாங்கலாம் என, அரசின் தொழில் நுட்ப குழு ஆலோசனை வழங்கியது.


latest tamil news
குற்றச்சாட்டு


இது தொடர்பாக ஆவினுடன் பேச்சு நடந்தது. ஆவினில் கொள்முதல் செய்ய ஏற்பாடுகளும் நடந்து வந்தன. ஆனால், தமிழக அரசு திடீரென தனியாரிடம், ஹெல்த் மிக்ஸ் பவுடரை கொள்முதல் செய்ய, 450 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியுள்ளது.இதில், 100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு, இந்த விவகாரம் பூதாகாரமாகி உள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த மக்கள் நல்வாழ்வுத் துறையினர், ஆவின் நிறுவனத்திடம், 'டைரி ஒயிட்னர், மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ்' இடையேயான வேறுபாடுகள் குறித்து கூறினர். ஆவின் நிறுவனத்திடம் ஹெல்த் மிக்ஸ் கொள்முதல் தொடர்பாக நடந்த பேச்சு குறித்து, யாரும் வாய் திறக்கவில்லை .தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்தால், 'வருவாய்' கிடைக்கும் என்பதால், ஆவின் நிறுவனம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil news

சமாளிப்பு


இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மக்கள் நல்வாழ்வுத்துறை எதிர்பார்ப்பது போன்ற ஹெல்த் மிக்ஸ் பவுடரை, ஆவின் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. ஆனால், தனியாரிடம் கொள்முதல் செய்தால், 'வருவாய்' கிடைக்கும் என்பதால், ஆவினில் கொள்முதல் செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.இது ஒருபுறம் இருக்க, மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ் 'டெண்டர்' இறுதி செய்யப்படும் வரை, ஆவின் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் வெளியிடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

ஆவின் புதிய பொருட்களை வெளியிட, முதல்வரின் தேதி கிடைக்கவில்லை என, ஆவின் அதிகாரிகள் கூறி சமாளிக்கின்றனர். இதன் பின்னணியில், சென்னை எம்.எல்.ஏ., ஒருவரின் மகனும், துறையின் முக்கிய புள்ளியின் மகனும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஆவின் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய், தனியாருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
07-ஜூன்-202217:09:37 IST Report Abuse
Krishnamurthy Venkatesan கண்ணில் விரலை விட்டு ஆட்டுவது என்பது இதுதானோ? அண்ணாமலை அவர்களை அரை வேக்காடு என சில திமுக அமைச்சர்கள் சொல்வதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. நாட்டை வழி நடத்த ஒரு நேர்மையான, படித்த, ஆழ்ந்த சிந்தனை உள்ள, நெறி தவறாத, கண்ணியமான வார்த்தைகளை பேசுபவர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவருக்கு நாம் உறுதுணையாக இருப்போம். ஒருவேளை திமுகவின் அழுத்தம் காரணமாக (அரசியல் பேரம்) அண்ணாமலையை தலைவர் பதிவியில் இருந்தோ, கட்சியில் இருந்தோ தூக்கினாலும் கூட இளைஞர்களும், ஒரிஜினல் காங்கிரஸ் காரர்களும், தேச பக்தர்களும், ஆன்மீகவாதிகளும், நேர்மையான ஊழலற்ற ஆட்சியை விரும்புபவர்களும் அவர் பின் அணி திரள்வோம்.
Rate this:
Cancel
கு.ரா.பிரேம் குமார் பெங்களூர் "வரும் முன் காப்பவன் தான்அறிவாளி புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி, அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி" 1964ல் பூம்புகார் படத்தில் கருணாநிதி எழுதிய வரிகள், தன் மகன் தமிழக முதல்வராக ஒருவேளை எதிர் காலத்தில் வர நேரிட்டால் தக்க அறிவுரையாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் தான். இதைதான் அண்ணாமலை தமிழக முதல்வருக்கு நினைவுபடுத்தும் வகையில் குற்றம் நடைபெற இருந்த சில தவறான நடவடிக்கைகளை அவரது பார்வைக்கு கொண்டு வந்தார். சக அமைச்சர்களுக்கு அண்ணாமலை மீது கோபம் இருந்தாலும், குற்றம் நடைபெறுவதற்கு முன்னரே தடுக்கும் நோக்கில் உண்மையான காவல் அதிகாரியாக தன்னை எண்ணி கொண்டு பணியாற்றிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயலை முதல்வர் உதாசீனபடுத்த மாட்டார் என நம்புவோம்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07-ஜூன்-202213:17:25 IST Report Abuse
கல்யாணராமன் சு.\\"வரும் முன் காப்பவன் தான்அறிவாளி புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி, அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி"\\ . சரியான கருத்தை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் ... ஒரே ஒரு திருத்தம் ... கருணாநிதி சொன்னது தான் செய்யப்போகும் ஊழலை பற்றி .. அதனால்தான் அவர் பிடிபடவேயில்லை ........... டாலின் அதை கற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை, ஆனால் அவரது அமைச்சர்கள் நிச்சயமாக கற்றுக் கொள்ளவில்லை ........டாலினுக்கு ஊழலற்ற ஆட்சியை தரவேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தால் அண்ணாமலையை ஊழல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசகராக வைத்துக்கொள்வது நல்லது.............
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜூன்-202212:12:34 IST Report Abuse
S. Narayanan அப்போ திரு. அண்ணாமலை அவர்கள் கூறிய ஊழல் குற்றச்சாட்டின் உண்மை இப்போது மக்கள் எல்லோருக்கும் மிக எளிதாக புரியும். அண்ணாமலை அவர்கள் ஒன்றும் குழந்தை அல்ல. அவர் 700 பக்க அறிக்கை கொடுக்கிறார் என்றால் விவரம் இல்லாமல் கொடுப்பாரா. ஆனால் அமைச்சர்கள் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தான் கூறி. சமாளிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X