தினமும் 252 மெகா வாட் மின்சாரம்; யூனிட் ரூ.4.04க்கு வாங்க முடிவு

Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : மின் தேவையை பூர்த்தி செய்ய, இரு நிறுவனங்களிடம் இருந்து, 252 மெகா வாட் மின்சாரம் வாங்க, தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.பல மாநிலங்களிலும் மின் தேவை அதிகம் இருப்பதால் மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால், மாலை நேர மின் தேவையை சமாளிக்க, மின்சார சந்தையில் 1 யூனிட், 10 ரூபாய்க்கு மேல் வாங்கும் நிலை ஏற்பட்டது.எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 1,500 மெகா வாட் மின்சாரம்
TNEB, Electricity Board. power generation

சென்னை : மின் தேவையை பூர்த்தி செய்ய, இரு நிறுவனங்களிடம் இருந்து, 252 மெகா வாட் மின்சாரம் வாங்க, தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

பல மாநிலங்களிலும் மின் தேவை அதிகம் இருப்பதால் மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால், மாலை நேர மின் தேவையை சமாளிக்க, மின்சார சந்தையில் 1 யூனிட், 10 ரூபாய்க்கு மேல் வாங்கும் நிலை ஏற்பட்டது.எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 1,500 மெகா வாட் மின்சாரம் வாங்க, மின் வாரியம், 2021 டிசம்பரில் டெண்டர் கோரியது.


latest tamil news



அதில், சில நிறுவனங்கள் பங்கேற்றன. இறுதியாக, ஒரு நிறுவனத்திடம் இருந்து, 102 மெகா வாட்; மற்றொரு நிறுவனத்திடம் இருந்து, 150 மெகா வாட் என, 252 மெகா வாட் மின்சாரம், யூனிட் 4.04 ரூபாய்க்கு வாங்க இறுதி செய்யப்பட்டுள்ளது.அந்நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து, ஆக., 1 முதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
07-ஜூன்-202211:08:05 IST Report Abuse
duruvasar அணில் அம்பானி கம்பனியிலிருந்து வாங்காதீர்கள். பழுத்த அனுபவம் உள்ள செந்தில் பாலாஜிக்கு தெரியாத வித்தையே இல்லை ஸ்டாலின் என்ற வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி. பட்டம் வாங்கியவர் செந்தில்பாலாஜி என்கிற விசுவாமித்திரர்..
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-202208:53:37 IST Report Abuse
Mani . V அப்புறம் என்ன? இனி ஜாலியாக கொள்ளையடிக்கலாம். அணில்கள் தங்களுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரில் இருந்து தப்பித்துக் கொள்ளும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X