'பொது மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்': போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
சென்னை : 'பொது மக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்; மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.சமீபத்தில், சென்னையில், நள்ளிரவில் போலீசாரின் வாகன சோதனையில், விக்னேஷ், 25, என்பவர் சிக்கினார். போலீஸ் காவலில் இறந்தார். போலீசார் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்திற்கு பின்,
DGP, Sylendra Babu, police

சென்னை : 'பொது மக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்; மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

சமீபத்தில், சென்னையில், நள்ளிரவில் போலீசாரின் வாகன சோதனையில், விக்னேஷ், 25, என்பவர் சிக்கினார். போலீஸ் காவலில் இறந்தார். போலீசார் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்திற்கு பின், 'குற்றங்களில் ஈடுபட்டவர்களை, காவல் நிலையங்களில் மாலை 6:00 மணிக்குள் விசாரிக்க வேண்டும். போலீஸ் விசாரணை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்' என, டி.ஜி.பி., எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கோவையில், 'ஸ்விக்கி' உணவு வினியோக நிறுவன ஊழியர் மோகனசுந்தரம், 38, என்பவரை, போக்குவரத்து போலீஸ்காரர் சதீஷ், 45, கொடூரமாக தாக்கும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து, சதீஷ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news
இதுகுறித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவு: பொது மக்களிடம், போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என, பல முறை வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு போலீஸ்காரரும் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். எவரையும் அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. கோவை சம்பவம் கடைசியாக இருக்கட்டும். இனி சட்டத்தை மீறி செயல்படும் போலீசார் மீது, ஒழுங்கு நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
07-ஜூன்-202218:07:53 IST Report Abuse
S.Baliah Seer எதெற்கெடுத்தாலும் காவல் நிலையத்திற்கு கூப்பிட்டு விசாரிக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.ஒருவர் மீது இன்னொருவர் வேண்டுமென்றே பொய் புகார்க் கொடுக்கும்போது நேர்மையானவர்களை காவல் நிலையத்திற்கு ஏன் அழைக்கவேண்டும்?இந்த மாதிரி நேரங்களில் போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரித்து உண்மையிலேயே ஒருவர் தவறு செய்திருந்தால் அவர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே. கலைஞர் ஜெ -வை கைது செய்ததும் ,பழிக்குப் பழியாக ஜெ-கலைஞரைக் கைது செய்து அவமானப் படுத்தியதும் நம் இந்திய வரலாற்றின் கறுப்புப் புள்ளியாகும். இரண்டுபேர் பொது இடத்தில் அடித்துக்கொள்கிறார்கள் அல்லது திருடன் ஜேப்படி செய்துவிட்டு ஓடுகிறான் போன்றவைதான் கிரைம் அவற்றிற்குத்தான் காவல் நிலைய விசாரணை தேவை. நம் சட்டம் நீதிமன்ற விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே தேவையற்ற போலீஸ் விசாரணை குறையும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
07-ஜூன்-202215:48:58 IST Report Abuse
Vena Suna இதெல்லாம் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும் என்று பொது மக்கள் நினைத்தனர்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-ஜூன்-202215:37:02 IST Report Abuse
D.Ambujavalli இந்த ஆட்சியில், தலைவரும் சரி, மற்ற துறைத் தலைகளும் சரி, 'தப்பு நடந்து போச்சு , மன்னியுங்கள் என்று அறிக்கை விட்டுவிட்டு தவறிழைத்தவரை தட்டிக்கொடுத்துவிட்டு 'நான் இருக்கிறேன், நீ இஷ்டத்துக்கு ஆடு ராஜா' என்று கொஞ்சினால் இது போல நூறு சம்பவங்கள் நடக்கும் விடியல் ஆட்சி என்றால் சும்மாவா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X