பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டை பாக்குக்கு விலை சொல்ற மாதிரி இருக்கே...

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி:தொழிலதிபர் அம்பானி வருமானம், 1,800 சதவீதம் அதிகரித்துள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அம்பானி வருமானம் குறித்து, நேர்மையான விளக்கம் அளிக்க முடியுமா?பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டை பாக்குக்கு விலை சொல்ற மாதிரி இருக்கே... இங்க இருக்கிற அமைச்சர்கள் ஊழலை பத்தி சொன்னா,
கே.எஸ்.அழகிரி, வேலு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி:தொழிலதிபர் அம்பானி வருமானம், 1,800 சதவீதம் அதிகரித்துள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அம்பானி வருமானம் குறித்து, நேர்மையான விளக்கம் அளிக்க முடியுமா?

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டை பாக்குக்கு விலை சொல்ற மாதிரி இருக்கே... இங்க இருக்கிற அமைச்சர்கள் ஊழலை பத்தி சொன்னா, எங்கயோ இருக்கிற அம்பானியை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க?




பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு பேட்டி: ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மகிழ்ச்சியை காண்பதே, 'திராவிட மாடல்' ஆட்சியின் நோக்கம். தமிழகத்தில், சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். எதிர்க்கட்சியாக யார் இருப்பது என்பதில், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே போட்டி நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் எப்போதும், தி.மு.க., தான் ஆளுங் கட்சியாக இருக்கும்.

'நெனப்பு தான் பொழப்பை கெடுத்துச்சு'ன்னு சொல்லுவாங்க... இப்படி, வாய் சவடால் விட்டுட்டு இருந்த அ.தி.மு.க., நிலைமை இன்னைக்கு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுமா இப்படி பேசுறீங்க?




அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன் பேச்சு
: முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள், தி.மு.க.,வினர் மீதும் இன்று வருகின்றன. 'விடியல் அரசு, தமிழகம் விடியப் போகிறது' என்றும் சொன்னார்கள். ஆனால், தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் இருளும். அதுபோலத் தான் நடக்கிறது. மக்கள், நிச்சயம் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவர்.

மொத்தத்தில், ஆட்சியின் தலைமை தான் மாறியிருக்கிறதேதவிர, காட்சிகள் எதுவும் மாறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது!




முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா பேச்சு
: இங்கு சிலர், அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தக் கூடாது என்று இடையூறு ஏற்படுத்துவதாக கூறினர். அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் என்ற முறையில், நான் ஒன்றை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்... அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.


latest tamil news



அந்தக் கட்சியில, பொதுச் செயலர் பதவியே கிடையாதுன்னு பொதுக்குழு தீர்மானம் போட்டு, அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது... அதன்பின்னும், இப்படி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா... இதை எல்லாம், 'நோட்' பண்றீங்களா அ.தி.மு.க., தலைவர்களே?


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில், கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு, நான்கு மாதங்களாக ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. வேறு வேலை செய்யாத பலருக்கு, அதுதான் வாழ்வாதாரம். அதையும் குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல.

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு மூடுவிழா நடத்த தயாராகி விட்டனர் போலும்!



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
08-ஜூன்-202200:10:47 IST Report Abuse
Jayaraman Pichumani அழகிரிக்கு சந்தேகம் இருந்தால் ஆர்.T.ஐயில் மனு அளித்து உரிய விளக்கம் பெறலாம்.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07-ஜூன்-202219:50:53 IST Report Abuse
Anantharaman Srinivasan காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அம்பானி ரிலையன்ஸ் ஊழல்பற்றி பக்கம்பக்கமாய் Indian express. ல் எழுதித்தள்ளிய துக்ளக் குருமூர்த்தியே ஓய்ந்து விட்டான். அழகிரி பேச்சு வடகறி தான்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
07-ஜூன்-202217:01:19 IST Report Abuse
Duruvesan அல்லக்கை அழகிரி நீ எப்படி கல்வி தந்தை ஆனே? அம்பானி அதானி ரெண்டு பேர் மேலயும் கேஸ் போடு யார் தடுக்கறா இல்ல zip all urs ? Tax payers அவங்க, மில்லியனுக்கும் மேலே குடும்பங்கள் வாழுது அவங்களால, கம்பெனி வெச்சி பணக்காரன் ஆனாங்க, மஞ்ச பய்யோட திருட்டு ரயில் ஏறி வந்து ஒரு தொழிலும் செய்யாமல் மொத்த பரம்பரையும் பணக்காரன் ஆனது தீயமுக முதலாளி குடும்பம் மட்டுமே, அதை கேட்க வக்கில்லை வந்துட்டாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X