தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல்

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், அதிமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில்
Tamilnadu, LKG, UKG, Classes, Closed, தமிழகம், எல்கேஜி, யுகேஜி

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.



அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், அதிமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவக்கப்பட்டன. அங்கன்வாடிகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்தும் வகையில் இந்த வகுப்புகள் துவங்கப்பட்டன. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.



latest tamil news



இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.



இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‛அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த இந்த வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர்,' எனக் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
07-ஜூன்-202219:20:24 IST Report Abuse
K. V. Ramani Rockfort அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் நடத்தினால் அப்புறம் எப்பூடி தனியார் பள்ளிகளின் முதலாளிகள், அதிகம் சம்பாதிக்க முடியும், சம்பாதித்தால்தானே அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முடியும்? அதான் இழுத்து மூடுறாங்க.
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
07-ஜூன்-202219:15:11 IST Report Abuse
K. V. Ramani Rockfort அரசு பள்ளி கல்வி சிறந்தது என்று ஆட்சியாளர்கள் அனைவருமே மார்தட்டி கூறுகின்றனர். ஆனால், அரசு சம்பளம் வாங்கும் முதலமைச்சர் / MLA / MP / அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் வாரிசுகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை, ஏன் ??
Rate this:
Cancel
Tc Raman - Kanchipuram,இந்தியா
07-ஜூன்-202218:22:01 IST Report Abuse
Tc Raman எதிர் பார்த்தது தானே. இந்த விடியாத அரசு தனியார் கல்வி கொள்ளைக்காரர்களுக்காக தன்னை நீட்டை எதிர்க்கிறது.அது முடியவில்லை என்பதால் முதலாளிகளின் கோரிக்கை படி அரசு பள்ளிகளில் எல் கே ஜி யு கேஜி யை எடுக்கிறது. அப்ப தன முதலாளி கல்லா நிரம்பும் . இவர்களுக்கு கமிஸ்ஸன் கிடைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X