சிதம்பரம் நடராஜர் கோவில் கணக்கு விவரங்களை அளிக்க தீட்சிதர்கள் மறுப்பு

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (108) | |
Advertisement
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்ய வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொது தீட்சிதர்கள், கணக்கு விவரங்களை கொடுக்க மறுத்து விட்டனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், வருமானம், வரவு - செலவு கணக்கு விபரங்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் குழு 7, 8ம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்ய வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொது தீட்சிதர்கள், கணக்கு விவரங்களை கொடுக்க மறுத்து விட்டனர்.latest tamil newsகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், வருமானம், வரவு - செலவு கணக்கு விபரங்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் குழு 7, 8ம் தேதிகளில் ஆய்வு செய்ய வரும் போது, சமர்ப்பிக்க வேண்டும் என, அறநிலைய துறை 'நோட்டீஸ்' வழங்கியது.

'நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக் கூடாது. ஆகம விதிப்படி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் தலையிடக் கூடாது. கோவில் தீட்சிதர்கள் சிறுபான்மையினர்' என, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி, அறநிலையத்துறை ஆய்வுக்கு, தீட்சிதர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆணையர், ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், கவர்னர் மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.


latest tamil news


இதற்கு அறநிலையத்துறை ஆணையர் கண்ணன், 'நடராஜர் கோவில் பொதுக்கோவில். இங்கு ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது. 'ஏற்கனவே குறிப்பிட்ட 7, 8 தேதிகளில் நடராஜர் கோவிலில் ஆய்வுக்கு வரும் அறநிலையத்துறை குழுவினருக்கு, தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குழுவினர் கேட்கும் விபரங்களை தர வேண்டும்' என, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

அதன் பின்பு, மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்தை சுட்டிக்காட்டி, 15 பக்கத்தில் மீண்டும் ஒரு கடுமையான அறிக்கையை கோவில் தீட்சிதர்கள், அறநிலையத்துறைக்கு அனுப்பினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news


இந்நிலையில், திட்டமிட்டபடி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய வந்தனர். அவர்களை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர். பின்பு கோவிலில் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வரவு செலவு கணக்குகளை ஆய்வுசெய்ய அதிகாரம் இல்லை என்றும் இந்த ஆய்வு உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் நடப்பதாக தீட்சிதர்கள் கூறினர்.

இதனால் அதிகாரிகள், கோவில் வளாகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வுக் குழுவில் அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், கடலூர் துணை ஆணையர் அசோக்குமார், கடலூர் துணை ஆணையர் ஜோதி சந்திரன் உள்பட அறநிலையத்துறை உயரதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.


இந்த ஆய்வின் போது கடலூர் மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி அசோக் குமார் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நடராஜர் கோவில் ஆய்வுக்காக வந்த அறநிலையத்துறை கோயில் வளாகத்தில் நெடு நேரமாக காத்திருந்து பின்பு திரும்பி சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-202208:13:54 IST Report Abuse
அப்புசாமி 1972 லே கட்டுமரத்திடம் கணக்கு கேட்டபோது கட்டுமரம் காமிச்சாரா?
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
08-ஜூன்-202200:41:46 IST Report Abuse
John Miller ...
Rate this:
Cancel
... - ,
07-ஜூன்-202219:57:38 IST Report Abuse
... . இந்து சமய அறநிலையத்துறை மாதிரி கிறிஸ்தவ அற நிலைய துறை இஸ்லாமிய அறநிலையதுறைன்னு ஓபன் பண்ணுங்க சேகர் பாபு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X