ஆய்வு நடத்துவது உறுதி: அமைச்சர் சேகர்பாபு

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (83) | |
Advertisement
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், வருமானம், வரவு - செலவு கணக்கு விபரங்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய சென்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொது
சிதம்பரம், நடராஜர் கோவில், ஆய்வு, உறுதி, அமைச்சர், சேகர்பாபு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், வருமானம், வரவு - செலவு கணக்கு விபரங்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய சென்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொது தீட்சிதர்கள், கணக்கு விவரங்களை கொடுக்க மறுத்து விட்டனர்.

இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் கோவில் பொதுவானது என்பதுதான் நீதிமன்ற தீர்ப்பு.


latest tamil news


உரிய சட்டத்தின்படி வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் அறநிலையத்துறையின் குழுவினர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள். அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி; மனுதர்மம். கோவிலில் எழும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களது கடமை. பக்தர்களின் புகார் தொடர்பாக நிச்சயம் விசாரணை மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என்ற எந்த முனைப்பும் இல்லை. அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரிக்க அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம்?. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-202208:12:15 IST Report Abuse
அப்புசாமி 1972 லேயே கட்டுமரத்திடம் புர்ச்சி தலிவர் கட்சி கணக்குகளை ஆய்வு செய்யணும்னு கேட்டபோது என்ன செஞ்சாங்க? இன்னும் மூலபத்திரம் எங்கே இருக்குன்னு தெரியலை.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
08-ஜூன்-202202:38:06 IST Report Abuse
BASKAR TETCHANA நீ எப்படியாவது முடிந்தால் ஆய்வு நடத்தி பார். அதற்க்கு முன் இன்னும் ஒரு வாரத்தில் அறிவாலயத்தி சிவனின் ஆக்கிரோஷமான ஆட்டத்தை பார் அப்போது தெரியும்.
Rate this:
Cancel
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
08-ஜூன்-202200:08:48 IST Report Abuse
Jayaraman Pichumani கொள்ளையடித்தே தீருவது என்று முடிவு செய்துவிட்டுத்தான் ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் சிவன் மீது கை வைத்தால் அழிவு நிச்சயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X