இந்தியா மன்னிப்பு கேட்க தேவையில்லை: கேரள கவர்னர் ஆரிப்கான் விளக்கம்

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (70) | |
Advertisement
புதுடில்லி: முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ., நிர்வாகிகள் பேசிய விவகாரத்தில், கத்தார் கூறியபடி, இந்தியா பொது மன்னிப்பு கேட்க தேவையில்லை என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் ஆரிப் முகமது கான் கூறியதாவது: கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில், பல நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளன. தங்களது
Qatar, Apology, Kerala Governor,Governor,India,kerala,ஆளுநர்,இந்தியா,கவர்னர்,கேரளா

புதுடில்லி: முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ., நிர்வாகிகள் பேசிய விவகாரத்தில், கத்தார் கூறியபடி, இந்தியா பொது மன்னிப்பு கேட்க தேவையில்லை என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் ஆரிப் முகமது கான் கூறியதாவது: கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில், பல நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளன. தங்களது கருத்தை தெரிவிக்க மக்களுக்கு உரிமை உள்ளது. அது எப்படி பிரச்னையாகும்? பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல.மன்னிப்பு கேட்க தேவையில்லை சிறிய எதிர்வினைகள் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை. தனது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.


latest tamil news


அனைத்து மரபுகளுக்கும் மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்வது நமது பாரம்பரியத்தில் உள்ளது. உண்மையில், அனைத்து மரபுகளையும் ஏற்று கொள்கிறோம். மரியாதை கொடுக்கிறோம் என்பது உண்மை. யாரையும் மற்றவர்களாக கருதுவது இந்தியாவின் கலாசாரம் இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய நமது கலாசாரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நமது பிரதமர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் ஆகியோரின் கருத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். யாரும் விடுபடக்கூடாது. அது தான் நமது கலாசார பாரம்பரியம். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். டிவியில் அனல் பறக்கும் விவாதத்தில் நுபுர் ஷர்மாவும் நவீன் குமார் ஜிண்டாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளனர். அதற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை. இவ்வாறு ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-ஜூன்-202222:59:16 IST Report Abuse
மலரின் மகள் மதத்தின் பெயரால் நமது நாட்டையே மட்டம் தட்டும் அளவிற்கு சில பொடியன் தேசங்களுக்கு பித்து தலைக்கேறி இருக்கிறது. இந்தியா இதை மனதில் வைத்து கொண்டு பின்புலத்தில் திரைமறைவில் டிப்ளமேடிக் ஆகா என்ன செய்யவேண்டுமோ அதை செய்யவேண்டும். இந்தியா எவ்வளவு பிரமாண்டமானது என்று பலருக்கும் புரிய வைக்கவேண்டும். சிலரை தட்டுக்கு தட்டி வைக்கவேண்டும். தீவிரவாதத்திற்கு உதவுகிறார்கள் என்று கத்தாரை சவூதி ஒடுக்கி வைத்தது. உணவிற்கும் பாலுக்கும் அல்லாடினார்கள். துர்க்கியால் கொடுப்பது போதாது போதாது என்று இந்தியாவிடம் மன்றாடித்தான் கஞ்சி குடித்தார்கள். தடுப்பூசிகளுக்காக நித்தம் பத்துமுறை நமது பிரதமரை கெஞ்சினார்கள். நமது அரசு பொதுவெளியில் பேசுவதில்லை, பெருந்தன்மை காட்டுகிறது. இனி இவர்களையெல்லாம் நெருங்கிய நட்பு நாடுகள் பட்டியலிலிருந்து வெளியேற்றவேண்டும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-ஜூன்-202222:38:18 IST Report Abuse
sankaseshan Antinationals like Sankar have no right and business to criticize, he can go to any Islamic countries and settle
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
07-ஜூன்-202221:22:40 IST Report Abuse
BALOU சூப்பர் ஜி அரபிகளுக்கு அறிவே இல்லை என்பதை அடிக்கடி நிருபிக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X