ரயில்வே கேட் திறக்கப்படாததால் பாதிப்பு

Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த புங்கனூர் ரயில்வே கேட் ஒரு மணி நேரம் கடந்தும் திறக்கப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் வந்த போது மூடப்பட்ட கேட் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் திறக்கமுடியாததால் 5 கி.மீ சுற்றி செல்லும் கிராமமக்கள்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் இருந்து புங்கனூர் செல்லும் வழியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது.
ரயில்வே கேட் திறக்கப்படாததால்  பாதிப்பு


மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த புங்கனூர் ரயில்வே கேட் ஒரு மணி நேரம் கடந்தும் திறக்கப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் வந்த போது மூடப்பட்ட கேட் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் திறக்கமுடியாததால் 5 கி.மீ சுற்றி செல்லும் கிராமமக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் இருந்து புங்கனூர் செல்லும் வழியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இச்சாலைதான் புங்கனூர், காடாகுடி, கோடங்குடி, நிம்மேலி, ஆதமங்கலம், மருதங்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலைகவும் உள்ளது .இன்று காலை 10 மணிக்கு ரயில் வருவதற்காக மூடிய கேட் 1 மணி நேரமாகியும் திறக்கப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் ஏற்பட்ட தொழில் துட்ப கோளாறால் சிக்னல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரயில் கடந்து சென்றும் கேட்டை திறக்க முடியவில்லை என கேட் கீப்பர் கூறினார்.இதனால் 10 ற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகள்,மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த வழியாகத்தான் வைத்தீஸ்வரன் கோவில் செல்வார்கள். ரயில்வே கேட் பழுதால் தொழுதூர் வழியாக 5 கிலோ மீட்டர் சுற்றியே சென்றனர்.இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இதனையடுத்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் மற்றும் ஊழியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பழுதை சீரமைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
08-ஜூன்-202206:28:08 IST Report Abuse
Manian அண்ணே சுந்தரம், எல்லாமே காலங் கடந்துதான் நடக்கும், யோகா பண்ணி மனசை வசைப்படுத்தத்தேன் இந்த ஏற்பாடோ? தம்பி மயில்சாமி, கேட்கீப்பர் சாவியோட உள்ளூர் அரசியல்வியாதி சகலை பேசுற கூட்டத்துக்கு ஒடனே வரணும், சகலை மட்டுமே பேசின ஆள் வேணாமான்னாராம். அங்கனே கேட்கீப்பர் கீரைவடிவாரு ஒறங்குதாராம் இது ஒன்றிய அரசு வேலை இல்லே, நம்ம உள்ளூரு மசெ வேலைதேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X