அண்ணாமலை ஒரு அடிமை: சீமான் கடுமை

Updated : ஜூன் 07, 2022 | Added : ஜூன் 07, 2022 | கருத்துகள் (88) | |
Advertisement
சென்னை: ஈழம் குறித்து பேசும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, டில்லிக்கு காவடித் தூக்கும் அடிமை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.நிருபர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ஈழத்திற்காக எங்களுடன் (பா.ஜ., உடன்) சேர்ந்து சீமான் போராடுவார் என அண்ணாமலை கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த
அண்ணாமலை, சீமான், நாதக, டில்லி, அடிமை, Seeman, NTK, Annamalai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஈழம் குறித்து பேசும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, டில்லிக்கு காவடித் தூக்கும் அடிமை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நிருபர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ஈழத்திற்காக எங்களுடன் (பா.ஜ., உடன்) சேர்ந்து சீமான் போராடுவார் என அண்ணாமலை கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த பதில்: அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டில்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை. ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என அமித்ஷா, மோடி என்னிடம் கூற வேண்டும். 8 வருடமாக ஈழத்தை பற்றி பேசாத பிரதமர் மோடி இப்போது பேசப் போகிறாரா?. திடீரென தன்னுடன் வந்து சீமான் போராடுவார் என அண்ணாமலை கூறுகிறார்.


latest tamil news


ஒருவேளை பா.ஜ., - திமுக கூட்டணி அமைக்க முடிவெடுத்தால் அண்ணாமலையை மாற்றிவிட்டு வேறு தலைவரை நியமிப்பர். அவ்வளவுதான் அண்ணாமலையின் இருப்பு. திடீரென அவருக்கு ஈழத்தின் மீது பாசம் வந்துள்ளது. அவர் வேறெதும் செய்ய வேண்டாம்; விடுதலை புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-ஜூன்-202219:45:10 IST Report Abuse
வெகுளி அண்ணாமலையின் முயற்சியால் மோடி அரசு இலங்கையில் தமிழினத்துக்கு நல்வாழ்க்கையை அமைத்து கொடுப்பார்கள்.... ஆனால் அது அதிபரின் வருமானத்தை பாதிக்குமே..... ஹிஹி.... அவரவர் பிரச்சனை அவரவருக்கு....
Rate this:
Cancel
Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூன்-202212:27:23 IST Report Abuse
Venkat, UAE திரு.அண்ணாமலையின் வெற்றிகரமான இலங்கை பயணம் தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்னையை முதலீடாக வைத்து திருட்டு தொழில் செய்து கொண்டிருந்த சீமான், சைக்கோ, குருமா போன்றவர்களுக்கும் திமுகவிற்கும் சரியான செருப்படி. இனி இவர்களின் பருப்பு வேகாது. தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து மலையக தமிழர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்யமுடியும் என பாடம் நடத்தி காட்டியிருக்கிறார்.
Rate this:
Cancel
08-ஜூன்-202205:56:57 IST Report Abuse
இலவசம் நாட்டை கெடுக்கும் என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க ஒரு சிலர் போல இலங்கைக்கு சென்று கயவனின் கையால் டீ குடித்து வந்தாரா இல்லை ஆமை கரி சாப்பிட்டு வந்தாரா இல்லை இசை போன்ற குரலை வைத்து ரேடியோவில் பேசி வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற சிங்கள ராணுவத்திற்கு ஆதரவாக மழை விட்டாலும் தூவானம் என்று வசனம் பேசி கடற்கரையில் காற்று வாங்கினாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X