சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை

Added : ஜூன் 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை : சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க இன்று காலை செல்ல உள்ளமுதல்வர் ஸ்டாலின் மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நுாலகத்தை நேற்று இரவு பார்வையிட்டார்.சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நேற்று இண்டிகோ விமானத்தில் மாலை 6:35க்கு முதல்வர் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன்,
MK Stalin,Sivaganga,Stalin

மதுரை : சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க இன்று காலை செல்ல உள்ளமுதல்வர் ஸ்டாலின் மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நுாலகத்தை நேற்று இரவு பார்வையிட்டார்.



சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நேற்று இண்டிகோ விமானத்தில் மாலை 6:35க்கு முதல்வர் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, மகேஷ், எ.வ.வேலு, மேயர் இந்திராணி, கலெக்டர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன் உட்பட பலர் வரவேற்றனர்.



மதுரை புது நத்தம் ரோடு பொதுப்பணித்துறை குடியிருப்பு அருகே 2.04 லட்சம் சதுரடி பரப்பளவில், 7 மாடிகளுடன், நவீன வசதிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நுாலக பணிகள் கடந்த ஜன.11ல் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்டது. 75 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அதனை நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.



இரவு 7:34 மணிக்கு வந்த முதல்வர், கருணாநிதி சிலை அமைய உள்ள பகுதியை பார்வையிட்டார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, கலையரங்கு அமைய உள்ள தரைத்தளம், கருணாநிதி அரங்கம் அமைய உள்ள முதல்தளத்தை பார்வையிட்டார். கட்டுமான விவரங்களை பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி விளக்கினார். இரவு 8:03 மணிக்கு அவர் மேலுார் அருகே தும்பைப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில்தங்கினார்.




இன்று சிவகங்கை செல்கிறார்


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டி சமத்துவபுரத்தை காலை 9:45 மணிக்குதிறந்து வைக்கிறார்.11:00 மணிக்கு காரையூரில் நடக்கவுள்ள விழாவில் 49 ஆயிரம் பயனாளிகளுக்கு 240 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவி வழங்குகிறார்.அங்கிருந்து புதுக்கோட்டை செல்கிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-202208:48:30 IST Report Abuse
சி சொர்ணரதி வெறும் மண் தரையில் நடக்காத முதல்வர் ஸ்டாலின்.வழியில் சாமரம் வீச ஆட்கள் ஏற்பாடு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே. இந்த கொடுமையை எல்லாம் 4 வருடங்கள் பார்க்க வேண்டுமா?.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-ஜூன்-202208:30:16 IST Report Abuse
duruvasar விழா கருணாநிதி முதல் குறுக்கு சாலையில் தானே நடக்கவிருக்கிறது. ? கருணாநிதி பெயர் வைப்பதை விட சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மக்களுக்கு என்ன பெரிய நலதிட்டம் கிடைத்துவிடபோகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X