பெண்கள் கிரிக்கெட்: சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார் மித்தாலிராஜ்

Updated : ஜூன் 08, 2022 | Added : ஜூன் 08, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள மித்தாலிராஜ் தனது 39 வயதில் அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 23 ஆண்டுகள் விளையாடிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்னும் சாதனைக்கு உரியவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்திய பெண்கள்
Mithali Raj, Announces, Retirement, International Cricket, மித்தாலி ராஜ், கேப்டன், இந்தியா, கிரிக்கெட், ஓய்வு

புதுடில்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள மித்தாலிராஜ் தனது 39 வயதில் அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 23 ஆண்டுகள் விளையாடிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்னும் சாதனைக்கு உரியவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அவர், தற்போது அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


latest tamil news



‛பல ஆண்டுகளாக தனக்கு அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி' என தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட மித்தாலி ராஜ், இதுவரை 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7,805 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையும் இவர் வசமே உள்ளது. அதேபோல் 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 89 டுவென்டி-20 போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-202218:36:35 IST Report Abuse
SUBBU,MADURAI எனக்கு மிகவும் பிடித்த தமிழ்பெண்ணான,அழகான, லெட்சணமான கேப்டன் Mithali Durai Raj.
Rate this:
Cancel
08-ஜூன்-202217:13:14 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சாதித்தவற்றுக்கு வாழ்த்துக்கள் ..........
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
08-ஜூன்-202216:04:48 IST Report Abuse
sethusubramaniam உங்கள் ஒய்வு வாழ்க்கை ஆரோக்கியமாக , அமைதியாக அமைய வாழ்த்துக்கள் சாதனையாளரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X