இந்தியா - வியட்நாம் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது

Updated : ஜூன் 09, 2022 | Added : ஜூன் 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஹனோய்-இந்தியா - வியட்நாம் இடையிலான ராணுவ உறவை 2030ம் ஆண்டு வரை விரிவுபடுத்தவும், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக இருநாடுகளும் தங்கள் ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் அரசுமுறை பயணமாக, தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு நேற்று முன் தினம் சென்றார்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹனோய்-இந்தியா - வியட்நாம் இடையிலான ராணுவ உறவை 2030ம் ஆண்டு வரை விரிவுபடுத்தவும், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக இருநாடுகளும் தங்கள் ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.



latest tamil news



நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் அரசுமுறை பயணமாக, தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு நேற்று முன் தினம் சென்றார். அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஜெனரல் பான் வான் ஜியாங்கை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை:இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது.


latest tamil news




இந்தோ - பசிபிக் பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு இந்த ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவு முக்கிய காரணியாக உள்ளது.பேச்சுக்கு பின், 2030ம் ஆண்டுக்கான இந்தியா- - வியட்நாம் ராணுவ உறவின் கூட்டறிக்கையில் இருநாடுகளும் கையொப்பமிட்டன. மேலும், இரு நாட்டு ராணுவமும், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்கு தங்கள் ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.இவ்வாறு அவர் கூறினார்.

தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயலும் நேரத்தில், வியட்நாமுடனான இந்த இரு ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
09-ஜூன்-202202:22:32 IST Report Abuse
mindum vasantham இது ஒரு வகையில் சீனாவை மய்யமாக வைத்து எடுக்க படும் முடிவும் கூட
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
09-ஜூன்-202202:21:26 IST Report Abuse
mindum vasantham இந்தியா தனது பண்டைய கலாச்சாரம் உடன் தொடர்புடைய நாடுகளான, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், கொரியா முடிந்தால் இலங்கை மற்றும் சீனாவுடன் உறவை பலப்படுத்த வேண்டும், நமக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல உறவு உள்ளது, ரஷ்யாவும் நண்பன் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X